ஐபிஎல் வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா… தொடர் நடைபெறுவதில் சிக்கல்!

ஐபிஎல் வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா… தொடர் நடைபெறுவதில் சிக்கல்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 9 ஆம் தேதி தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. அடுத்த நாளில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பையில் மோதுகின்ன்றன. இச்சூழலில் டெல்லி அணியின் முக்கிய வீரர் அக்சர் படேலுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

ஐபிஎல் வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா… தொடர் நடைபெறுவதில் சிக்கல்!
ஐபிஎல் வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா… தொடர் நடைபெறுவதில் சிக்கல்!

முன்னதாக, கொல்கத்தா வீரர் நிதிஷ் ராணாவுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது. இவ்வாறு வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதால் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. சென்ற ஆண்டு கொரோனா தொற்றால் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. செப்டம்பரில் துபாயில் நடத்தப்பட்டது. இச்சூழலில் இந்த ஆண்டும் கொரோனா தொற்று வேகமெடுத்துவருவதால் பிசிசிஐ கவலையில் உள்ளது.

ஐபிஎல் வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா… தொடர் நடைபெறுவதில் சிக்கல்!

தற்போது இரட்டை உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவிவருவதால் அதன் தாக்கம் அதிவேகமாக இருக்கிறது. இந்த வகை வைரஸ் முந்தையை வைரஸை விட வீரியமிக்கது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்திவருகின்றன.

தற்போது பிரபலங்களுக்கும் கொரோனா தொற்று பரவிவருகிறது. சமீபத்தில் நடிகர் அமீர்கானுக்கும் மாதவனுக்கும் அடுத்தடுத்த நாளில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதற்குப் பின் சச்சினுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்றியப்பட்டு, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.