• March
    31
    Tuesday

Main Area

Main



கொரானா நேரத்தில் கதவை தட்டி கொடுக்கும் பிக் பஜார்-'போன் பண்ணுங்க பொருளை ஆர்டர் பண்ணுங்க'

big-bazaar
big-bazaar

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 21 நாட்களுக்கு முழு ஊரடங்கின் காரணமாக பிளிப்கார்ட், அமேசான், பிக்பாஸ்கெட் மற்றும் கோபர்ஸ் தங்கள் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளன அல்லது குறைத்துள்ளன. இதன் காரணமாக, ஆன்லைன் விநியோக சேவைகள் நிறைய குறைந்துவிட்டன. ஆனால் இப்போது  'பிக் பஜார்' டெல்லி, மும்பை, பெங்களூரு, குருகிராம் போன்ற பெரிய நகரங்களில் ஆன்லைன் விநியோக சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

big-bazaar-78

இந்த புதிய சேவையை அறிமுகப்படுத்திய உடனேயே,  டெலிவரிக்கான தொலைபேசி அழைப்புகள் குவிய தொடங்கியது. இதனால் அந்த  நிறுவனம் புதன்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட வேண்டியிருந்தது, அது என்னவென்றால் அவர்கள் வீட்டு விநியோகத்திற்கான அதிக எண்ணிக்கையிலான ஆர்டர்களைப் பெறுவதால்  மேலும் தற்போதைய கட்டுப்பாடுகள் காரணமாக சிறிது தாமதம் ஏற்படக்கூடும் என்று கூறியுள்ளது .

கிஷோர் பியானி தலைமையிலான பியூச்சர் ரீடெய்ல் லிமிடெட் (எஃப்ஆர்எல்) இன் பிக் பஜாரில் ராஞ்சி, உத்தரகண்ட், நொய்டா, காஜியாபாத், மத்தியப் பிரதேசம், இமாச்சல பிரதேசம், ஜம்மு, பஞ்சாப், ஹரியானா, ஃபரிதாபாத், குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இடங்களிலும்  விநியோக சேவை தொடங்கப்பட்டுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.