ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களும் சேரலாம் – ஜோ பைடன் உத்தரவு!

 

ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களும் சேரலாம் – ஜோ பைடன் உத்தரவு!

அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்வதற்கான தடையை நீக்கி புதிய அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். டிரம்ப் ஆட்சிக் காலத்தில் இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த நொடியிலிருந்தே அதிரடியான அரசியல் பணியில் ஈடுபட்டுவருகிறார் அதிபர் ஜோ பைடன். அவரின் உத்தரவுகள் அனைத்தும் டிரம்பின் உத்தரவுகளை நீக்கும் விதமாகவே அமைந்துள்ளன.

அமெரிக்காவையே எதிர்த்த மெக்சிகோ சுவர் எழுப்புதலை ரத்து செய்தது முதல் பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்தது வரை அனைத்துமே டிரம்பின் உத்தரவுகளுக்கு எதிரான நிலைப்பாடு தான்.

ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களும் சேரலாம் – ஜோ பைடன் உத்தரவு!

தேர்தல் பரப்புரையில் என்னவெல்லாம் சொன்னாரா, அதனை அதிவிரைவாகவே நிறைவேற்றி வருகிறார் பைடன். அந்த வகையில் தற்போது அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் சேர விதிக்கப்பட்டிருந்த தடையை பைடன் நீக்கியுள்ளார். பைடனின் இந்த உத்தரவு மூன்றாம் பாலினத்தவர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. அவர்கள் பைடனுக்கு மகிச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்கள்.

அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது, மூன்றாம் பாலினத்தவர்கள் ராணுவத்தில் சேர அனுமதி வழங்கினார். அந்த அனுமதியை ஆட்சிக்கு வந்த உடன் டிரம்ப் தடைசெய்தார். இந்த உத்தரவைத் தான் தற்போது பைடன் நீக்கியுள்ளார்.

ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களும் சேரலாம் – ஜோ பைடன் உத்தரவு!

இதுகுறித்து பைடன் கூறுகையில், “பாலின வேறுபாடின்றி அனைத்து அமெரிக்கர்களும் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்ற தார்மீக உரிமை இருக்கிறது. அதில் மூன்றாம் பாலினத்தவர்கள் ஒன்றும் விதிவிலக்கல்ல. அவர்களில் தகுதியானவர்கள் நிச்சயம் ராணுவத்தில் பணியாற்றலாம்” என்றார்.