பென்சில்வேனியா மாகாணத்திலும் பைடன் முன்னிலை – அமெரிக்க தேர்தல்

 

பென்சில்வேனியா மாகாணத்திலும் பைடன் முன்னிலை – அமெரிக்க தேர்தல்

அமெரிக்கா தேர்தலில் அதிபர் யார் என்பதுதான் மூன்று நாட்களாக உலகம் முன் உள்ள முக்கிய கேள்வி. இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இன்னும் முடிந்தபாடில்லை. அமெரிக்காவின் அதிபருக்கான மெஜாரிட்டிக்கு 270 வாக்குகள் தேவை. இப்போதைய நிலையில் ஜோ பைடன் 264 ; ட்ரம்ப் 214 என்ற நிலையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

பென்சில்வேனியா மாகாணத்திலும் பைடன் முன்னிலை – அமெரிக்க தேர்தல்

ஜார்ஜியாவில் 99 சதவிகித வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் இருவருமே 49.4 சதவிகித வாக்கு விகிதத்தோடு சமமான பலத்தில் இருக்கிறார்கள். 1200 வாக்குகள் வித்தியாசத்தில் ட்ரம்ப் முன்னிலையில் இருந்த நிலை மாறி, தற்போது நிலைமை மாறிவிட்டது. ஜோ பைடனுக்கான ஆதரவு ஓட்டுகள் உயர்ந்து, ட்ரம்பை விட அதிகம் பெற்று முன்னேறி விட்டார்.

இந்த வரிசையில் இன்னொரு மாகாணமும் சேர்ந்து விட்டது. ஆம். பென்சில்வேனியாவில் ட்ரம்ப் முன்னிலை வகித்துக்கொண்டிருந்த நிலை மாறி தற்போது பைடன் முன்னேறி விட்டார்.

பென்சில்வேனியா மாகாணத்திலும் பைடன் முன்னிலை – அமெரிக்க தேர்தல்

98 சதவிகித வாக்குகள் எண்ணிக்கை முடிவடநித நிலையில் ஜோ பைடன் 49.5 சதவிகிதமும் ட்ரம்ப் 49.4 சதவிகிதமும் வாக்குகள் பெற்றுள்ளனர். 5500 வாக்குகள் வித்தியாசத்தில் ட்ரம்பை விட பைடன் முன்னிலை வகிக்கிறார். இங்கு பைடன் வெற்றிப் பெற்றால் அவருக்கு 20 வாக்குகள் கிடைக்கும். அதனால், அவர் அதிபராவது எளிதாகி விடும். ஏனெனில், அவருக்கு 6 வாக்குகளே தேவை.