மியான்மர் மீது பொருளாதார தடை… அதிரடி காட்டும் பைடன்!

 

மியான்மர் மீது பொருளாதார தடை… அதிரடி காட்டும் பைடன்!

மியான்மர் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ராணுவம் கவிழ்த்தது. நாட்டின் அதிபர் யு வின் மைன்ட், ஆளுங்கட்சித் தலைவர் ஆங் சான் சூகி என பல்வேறு தலைவர்கள் வீட்டுக்காவலில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில் இணைய சேவை நிறுத்தப்பட்டிருக்கிறது. பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள சேவைகளும் முடக்கப்பட்டிருப்பதால், அங்கு என்ன நடக்கிறது என்பது உலகிற்கே தெரியவில்லை.

மியான்மர் மீது பொருளாதார தடை… அதிரடி காட்டும் பைடன்!

மியான்மர் ராணுவத்தின் இந்தச் செயலை பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் விமர்சித்துவருகின்றனர். அந்நாட்டுடனான அரசியல் மற்றும் ராணுவ உறவுகளை முறித்துக்கொள்வதாக நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் ஆவேசமாகக் கூறியிருந்தார். நியூஸிலாந்து தான் மியான்மருக்கு ராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்த முதல் நாடு. இச்சூழலில் மியான்மர் மீது பொருளாதார தடை விதிக்கும் கோப்பில் அமெரிக்க அதிபர் பைடன் நேற்று கையெழுத்திட்டார்.

மியான்மர் மீது பொருளாதார தடை… அதிரடி காட்டும் பைடன்!

அதன்பின் பேசிய அவர், “மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்புக்குக் காரணமான ராணுவ தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அந்நாட்டிற்கு 1 பில்லியன் டாலர் அமெரிக்க நிதி அளித்திருந்தது. அதனை அந்தத் தலைவர்கள் பயன்படுத்தாமல் இருக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும். ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளையும் அதிகரிக்கப்படும். இருப்பினும், அந்நாட்டு மக்களுக்கு நேரடியாகச் செல்லும் சுகாதார மற்றும் கல்விக் குழுக்களுக்கு அமெரிக்காவின் ஆதரவு எப்போதும் இருக்கும். உலகமே மியான்மரில் அரங்கேறும் நிகழ்வுகளைக் கவனித்துவருகிறது. ஆகவே ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்று பேசினார்.