ஆல் ஏரியா நாங்க தான் கிங்… ஹாட்ரிக் அடித்த இந்திய வீரர்கள்!

 

ஆல் ஏரியா நாங்க தான் கிங்… ஹாட்ரிக் அடித்த இந்திய வீரர்கள்!

சர்வதேச அளவில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடும் வீரரைத் தேர்ந்தெடுத்து, மாதத்தின் சிறந்த வீரர் (ICC Men’s Player of the Month award) என்ற விருது வழங்கப்படும் என ஐசிசி அறிவித்திருந்தது. விருதை அடுத்த மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமை வழங்கப்படும் என்றும் கூறியிருந்தது.

ஆல் ஏரியா நாங்க தான் கிங்… ஹாட்ரிக் அடித்த இந்திய வீரர்கள்!

இந்த அறிவிப்பு வெளியான சமயம் தான் இந்திய-ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஒரு போட்டியில் வெற்றி காணவும், ஒரு போட்டியில் டிரா செய்யவும் பேருதவியாக ரிஷப் பண்ட் இருந்தார். அதனால் ஜனவரி மாதத்திற்கான சிறந்த விருதை பண்டுக்கு வழங்குவதாக ஐசிசி அறிவித்தது. இதையடுத்து இந்த மாதத்திற்கான பரிந்துரையில் அஸ்வின் இடம்பிடித்தார்.

ஆல் ஏரியா நாங்க தான் கிங்… ஹாட்ரிக் அடித்த இந்திய வீரர்கள்!

இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இந்தியா வெல்வதற்கு உறுதுணையாக இருந்ததால் அஸ்வினுக்கு பிப்ரவரி மாதத்திற்கான விருது வழங்கப்பட்டது. இச்சூழலில் மார்ச் மாதத்திற்கான மூன்று வீரர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்திய வீரர் புவனேஸ்வர் குமார் இடம்பிடித்திருந்தார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 6 விக்கெட்டுகளும், டி20 தொடரில் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருந்தார். இதன் காரணமாக இப்பட்டியலில் இடம்பெற்றார். ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் மற்றும் ஜிம்பாப்வே அணியின் ஸீன் வில்லியம்ஸும் இப்பட்டியலில் இருந்தனர். தற்போது அந்த விருதை புவனேஸ்வர் குமார் தட்டிச் சென்றிருக்கிறார். இதன்மூலம் மூன்று மாதங்களுக்கான விருதுகளையும் பெற்று இந்திய வீரர்கள் ஹாட்ரிக் அடித்துள்ளனர்.