இந்தியாவின் ரூ-பே நெட்வொர்க்கில் இணையும் பூட்டான்!

 

இந்தியாவின் ரூ-பே நெட்வொர்க்கில் இணையும் பூட்டான்!

இந்தியாவின் ரூ-பே பண பரிவர்த்தனை நெட்வொர்க்கில் பூட்டான் இணைந்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், பூட்டான் பிரதமரும் இணைந்து, இன்று இரண்டாவது கட்ட சேவைகளை தொடங்கி வைக்கின்றனர்.

இந்தியாவின் ரூ-பே நெட்வொர்க்கில் இணையும் பூட்டான்!


கடந்த ஆகஸ்ட் மாதம் பூட்டான் சென்ற பிரதமர் மோடி, இதற்கான ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில், தற்போது ரூ-பே நெட்வொர்க் முழுமையாக தொடங்கி வைக்கப்படுகிறது. இதன் மூலம் பூட்டான் வாடிக்கையாளர்கள், இந்திய பண பரிமாற்ற வழியான ரூ-பே நெட்வொர்க்கை முழுமையாக பயன்படுத்த முடியும். காணொலி காட்சி வழியாக இரண்டு நாட்டு பிரதமர்களும் இதை தொடங்கி வைக்கின்றனர். இதுதவிர, இந்தியாவின் இஸ்ரோ ஏவுதளத்திலிருந்து பூட்டான் செயற்கைகோள்களை ஏவுவதற்கான ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் ரூ-பே நெட்வொர்க்கில் இணையும் பூட்டான்!

பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சேவைவை பூட்டானுக்கு விரிவுபடுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதற்கான செயல்பாடுகளும் இன்று தொடங்கி வைக்கப்படுகின்றன. பிஎஸ்என்எல் நிறுவனம், இந்தியா தவிர வெளிநாடுகளுக்கு அளிக்கும் மூன்றாவது சேவை என்பது குறிப்பிடத்தக்கது. ரூ-பே பண பரிமாற்ற மூலம், பூட்டான் வாடிக்கையாளர்கள் இந்தியாவின் அவர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த முடியும். அதுபோல, பூட்டானிலும் ஏடிஎம் மற்றும் விற்பனையகங்களில் இதன் வழியாக பணம் பரிமாற்றம் மேற்கொள்ள முடியும்.

இந்தியாவின் ரூ-பே நெட்வொர்க்கில் இணையும் பூட்டான்!

இந்தியாவும், பூட்டானும் இணைந்து பல முக்கியமான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. கலாச்சார ரீதியாகவும் உறவு கொண்டுள்ள இரண்டு நாடுகளும், தற்போது வர்த்தகரீதியான உறவுகளிலும் ஆழமான உறவை கொண்டுள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.