எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கபடாமலே 12க்கும் மேற்பட்டோர் அமைச்சர்களாக இருக்கின்றனர்… பா.ஜ.க.வை சாடிய பாகேல்

எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கபடாமலே 12க்கும் மேற்பட்டோர் அமைச்சர்களாக இருக்கின்றனர்… பா.ஜ.க.வை சாடிய பாகேல்

மத்திய பிரதேசத்தில்தான் நாட்டிலே முதல் முறையாக 12க்கும் மேற்பட்டவர்கள் தேர்தலை சந்திக்காமல் அமைச்சர்களாக உள்ளனர் என மத்திய பிரதேச பா.ஜ.க. அரசை சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் குற்றம் சாட்டினார்.

மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் ஆளும் கட்சியான பா.ஜ.க.வும், எதிர்க்கட்சியான காங்கிரசும் அந்த தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக சத்தீஸ்கர் முதல்வரும், அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பூபேஷ் பாகேல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கபடாமலே 12க்கும் மேற்பட்டோர் அமைச்சர்களாக இருக்கின்றனர்… பா.ஜ.க.வை சாடிய பாகேல்
முதல்வர் பூபேஷ் பாகேல்

குவாலியரில் பூபேஷ் பாகேல் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: 15 மாதங்களில் (கமல்நாத் ஆட்சியில்) காங்கிரஸ் என்ன செய்தது என்று சிவ்ராஜ் சிங் சவுகான் கேட்கிறார். அதேவேளையில், அவர்கள் 15 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார்கள், அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை சொல்லவில்லை, ஆனால் 15 மாதங்களில் என்ன நடந்தது என்று அவர்கள் கேட்கிறார்கள்.

எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கபடாமலே 12க்கும் மேற்பட்டோர் அமைச்சர்களாக இருக்கின்றனர்… பா.ஜ.க.வை சாடிய பாகேல்
தேர்தல்

மத்திய பிரதேசத்தில் மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட அரசை அவர்கள் கவிழ்த்தனர். நாட்டில் முதல் முறையாக 12க்கும் மேற்பட்ட நபர்கள் வாக்களிக்காமல் அமைச்சர்களாகி விட்டனர். மக்கள் ஆணையை வழங்கியிருந்தனர், அது அவமதிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் வீழ்த்தப்பட்டது. ஆணை வழங்கப்படாதபோது நீங்கள் (சிவ்ராஜ் சிங் சவுகான்) எவ்வாறு முதல்வராக ஆனீர்கள் என்று மக்கள் கேட்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.