பா.ஜ.க.வின் கைகளை விட்டு அசாம் நழுவ போகிறது.. பூபேஷ் பாகல்

 

பா.ஜ.க.வின் கைகளை விட்டு அசாம் நழுவ போகிறது.. பூபேஷ் பாகல்

பா.ஜ.க.வின் கைகளை விட்டு அசாம் நழுவ போகிறது என அசாம் காங்கிரசுக்கான மூத்த பார்வையாளர் பூபேஷ் பாகல் தெரிவித்தார்.

சத்தீஸ்கர் முதல்வரும், அசாம் காங்கிரசுக்கான மூத்த பார்வையாளருமான பூபேஷ் பாகல் கூறியதாவது: பா.ஜ.க. தனது 2016ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டது. வங்கதேச எல்லையை மூடுவோம்,  பிரம்மபுத்திரா நதியின் இருபுறமும் எக்ஸ்பிரஸ் வே அமைப்போம், தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தினக்கூலியை உயர்த்துவோம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் அவர்கள் அதனை நிறைவேற்றவில்லை.

பா.ஜ.க.வின் கைகளை விட்டு அசாம் நழுவ போகிறது.. பூபேஷ் பாகல்
பா.ஜ.க.

அவர்களிடம் எந்த அஜண்டாவும் கிடையாது. கடந்த 5 ஆண்டுகளாக, சர்பானந்தா சோனோவால் அல்லது ஹிமாந்தா பிஸ்வா சர்மா ஆகியோரில் யார் முதல்வராக இருந்தார் என்பதை அவர்கள் முதலில் தீர்மானிக்க வேண்டும். பா.ஜ.க. குழப்பம் அடைந்தது. அசாம் அவர்களின் கைகளை விட்டு நழுவ போகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க.வின் கைகளை விட்டு அசாம் நழுவ போகிறது.. பூபேஷ் பாகல்
ஹிமந்தா பிஸ்வா சர்மா

அசாமில் 126 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மொத்தம் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. 2016ம் ஆண்டில் அசாமில் சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டங்களாக நடந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி, 15 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி  வைத்தது குறிப்பிடத்தக்கது