மேற்கு வங்க பிரசார கூட்டங்களை ரத்து செய்த ராகுல் காந்தி.. பாராட்டிய சத்தீஸ்கர் முதல்வர்

 

மேற்கு வங்க பிரசார கூட்டங்களை ரத்து செய்த ராகுல் காந்தி.. பாராட்டிய சத்தீஸ்கர் முதல்வர்

கொரோனா வைரஸ் தீவிரவமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு, மேற்கு வங்க பிரசார கூட்டங்களை ராகுல் காந்தி ரத்து செய்ததை சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் பாராட்டியுள்ளார்.

நம் நாட்டில் கொரேனா வைரஸின் 2வது அலை மிகவும் தீவிரமாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. தற்போதைய கொரோனா சூழ்நிலையில் மேற்கு வங்கத்தில் பொதுக்கூட்டங்களில் தான் பங்கேற்பது மற்றும் அந்த கூட்டங்களில் கலந்து கொள்பவர்களுக்கும் ஆபத்தானதாக அமையும் என்பதை உணர்ந்த ராகுல் காந்தி தனது மேற்கு வங்க கூட்டங்களை ரத்து செய்தார்.

மேற்கு வங்க பிரசார கூட்டங்களை ரத்து செய்த ராகுல் காந்தி.. பாராட்டிய சத்தீஸ்கர் முதல்வர்
காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இது தொடர்பாக டிவிட்டரில், கொரோனா பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு மேற்கு வங்கத்தில் எனது அனைத்து விதமான தேர்தல் பிரச்சாரங்களையும் ரத்து செய்கிறேன். தற்போதுள்ள சூழலில் மிகப்பெரிய அரசியல் பொதுக்கூட்டம், தேர்தல் பிரச்சார ஊர்வலம் ஆகியவை நடத்த வேண்டுமா என்பதை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஆழமாக சிந்திக்க வேண்டும் என பதிவு செய்து இருந்தார்.

மேற்கு வங்க பிரசார கூட்டங்களை ரத்து செய்த ராகுல் காந்தி.. பாராட்டிய சத்தீஸ்கர் முதல்வர்
பூபேஷ் பாகல்

ராகுல் காந்தியின் இந்த முடிவை சத்தீஸகர் முதல்வர் பூபேஷ் பாகல் பாராட்டியுள்ளார். தனியார் செய்தி நிறுவனம் ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பூபேஷ் பாகல் பேசுகையில், அரசியல்வாதிகள் நமக்கு முன்மாதிரியாக இருக்கு வேண்டும். கோவிட் காரணமாக தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என்று எந்த தலைவரும் கூறவில்லை. பிரதமர் மோடியே பல கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். இது காந்தியின் நாடு. நாம் மக்களுக்கு கற்பிக்க வேண்டும். பின்னர் அவர்கள் கற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.