வேளாண் சட்டங்களுக்கு ஆதரவான சினிமாவா பூமி?

 

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவான சினிமாவா பூமி?

ஜெயம் ரவியின் 25-வது திரைப்படமாக வெளிவந்துள்ளது ‘பூமி’. கொரோனா கால சிக்கல்களால் ஓடிடியில் நேற்று வெளியானது இப்படம்.

படத்தின் கதை… செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்ய முயலும் ஆராய்ச்சியாளன் தன் நாட்டில் அழிந்து வரும் விவசாயம் பற்றித் தெரிந்துகொள்கிறான். அதனால், செவ்வாய் செல்வதைத் தவிர்த்து தன் நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்ஹ்டு காப்பாற்ற போராடி வெற்றி பெறுகிறார். ஒன்லைன் ஸ்டோரியாகப் பார்க்கையில் வெகு சுவாரஸ்யமானதாக இருக்கிறது அல்லவா… ஆனால், கதை மேம்படுத்தல், படமாக்கலில் சொதப்பி வைத்திருக்கிறார்கள்.

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவான சினிமாவா பூமி?

படத்தின் திரைக்கதை இடைவேளை வரை ஒருவழியாக தொய்வின்றி செல்கிறது. ஆனால், அதன்பின் முட்டுச் சந்தில் மாட்டிக்கொண்டதுபோல அங்கேயே சுற்றி சுற்றி பேசிப் பேசி முடிக்க வேண்டும் என்பதால் முட்டிக்கொண்டே முடிக்கிறார்கள்.

ஜெயம் ரவியின் நடிப்பில் எந்தக் குறையுமில்லை. ஆனால், கதை வளர்த்தெடுப்பிலும் திரைக்கதையில் நொண்டியத்ததால் விழலுக்கு இறைத்த நீராகி விட்டது ஜெயம் ரவியின் பங்களிப்பு.

கார்பன் டை ஆக்ஸைடையே சுவாசித்து வாழ முடியும் என்பதற்கு மாத்திரை கண்டுபிடிக்கும் காட்சி முதலில் வருகிறது. அப்படியெனில், மரங்களை வளர்ப்பதற்குப் பதில் அந்த மாத்திரைகளையே அதிகம் உற்பத்தி செய்துவிட்டால் போதுமே என்ற கேள்வியும் எழுகிறது. சரி விடுங்கள். இதெல்லாம் அறிவியல் பூர்வமாக சந்தேகங்கள். சராசரி ரசிகரின் பார்வைக்குள் செல்வோம்.

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவான சினிமாவா பூமி?

இந்தப் படத்தில் கதாநாயகி என்ற ஒருவரின் தேவை என்ன… ஒரு பாடலுக்கும் போஸ்டரில் ஜெயம் ரவியோடு நின்று போஸ் கொடுப்பதைத் தவிர. அம்மா கேரக்டரும் அப்படித்தான். இப்படியே கழித்துக்கொண்டே போனால் ரவி, வில்லன், தம்பி ராமையா மட்டும்தான் மிஞ்சுவார் போல.

உலகையே கைக்குள் வைத்திருக்கும் 13 குடும்பங்களில் ஒருவர்தான் வில்லன். ஆனால், அவர் கால் செண்டருக்கு போன் செய்து தவறுதலாக எடுக்கப்பட்ட பணத்தைக் கேட்பதுபோல ரவியுடன் போனில் பேசுவதையே படம் முழுக்கச் செய்கிறார்.

கார்ப்பரேட்டுகளின் கைகளிலிருந்து விவசாயத்தைப் பறிக்க வேண்டும் எனப் போராடும் நாயகன், ஒரு கட்டத்தில் நாமே கார்ப்பரேட்டாகி விவசாயத்தைக் காக்க வேண்டும் என்ற முடிவுக்குச் செல்கிறார். டெல்லியில் வேளான் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் போராட்டம் 50 வது நாளை நெருங்குகிறது. அவர்கள் இந்தச் சட்டங்களை எதிர்ப்பதற்கு முதன்மையான காரணம், விவசாயம் கார்ப்பரேட் நிறுவனங்களில் கைகளுக்குச் சென்று விடும் எனும் அச்சம்தான்.

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவான சினிமாவா பூமி?

அதாவது பெரு முதலாளிகள் விவசாயிகளுடன் ஒப்பந்தம் போட்டு, குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்துகொள்வது என்பது நாளடைவில் அடிமை முறையாக மாறிவிடும். விவசாயிகளின் நிலங்களே பறிபோய்விடும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் கருதுகள்.

பூமி படத்தில் திருப்பூர் உள்ளிட்ட பெரு முதலாளிகள் விவசாயிகளிடம் முன்கூட்டியே ஒப்பந்தம் போடுகிறார்கள். நேரடியாக இல்லை. ஜெயம் ரவி ஆரம்பித்திருக்கும் ஒரு கார்ப்பரேட் கம்பெனி மாதிரியான ஓர் அமைப்பின் மூலம். அந்த அமைப்பிற்கு சி.இ.ஒ ஆரம்பித்து சேல்ஸ் மேனேஜர், ஹெச்.ஆர் என எல்லோரும் உண்டு. இது ஒருவகையில் இப்போது மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு என்றே புரிந்துகொள்ள அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. சின்னச் சின்ன வேறுபாடுகளைச் சொல்லக்கூடும். ஆனால், ‘பெரு நிறுவனங்கள் விவசாயிகளிடம் முன்கூட்டியே ஒப்பந்தம்’ எனும் அடிப்படை படத்திலும் சட்டத்திலும் ஒன்றாக இருப்பதாகவே தோன்றுகிறது.

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவான சினிமாவா பூமி?

படத்தில் விவசாயம் 2.0 எனக் காட்டப்படுவதில் அரசின் பங்கு என எதையும் காட்டுவதில்லை. இதுவும் ஒருவகையில் விவசாயத்தை அரசிடமிருந்து பிரிக்கும் செயல்தான். அதாவது முழுக்க முழுக்க தனியார் வசமாவது. அதிலும் ஒரு பாட்டு வரிகளில்… இலவச மின்சாரம் வேண்டாம்… கடன் தள்ளுபடி வேண்டாம் என்றெல்லாம் வருகின்றன. ரொம்பவே அதிர்ச்சியாக இருக்கிறது.

விவசாயம் என்பது பெரும் அளவிலான தொழில். ஆனால், சிறு குறு விவசாயிகளால் செய்யப்படும் தொழில். இதில் ஒருங்கிணைப்பு என்பது சாத்தியமில்லாதது என்பதே யதார்த்தம். அதனால், இயற்கை பேரிடர் பிரச்சனைகளில் அரசு உதவுகிறது. மேலும், குறைந்த பட்ச ஆதார விலையை வருடந்தோறும் அரசு நிர்ணயம் செய்கிறது. ஆனால், இதைப் பற்றியெல்லாம் படத்தில் விவாதிக்கப்படவே இல்லை.

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவான சினிமாவா பூமி?

தமிழ்நாட்டின் கோவில் கோபுரங்களில் உள்ள நெல்லை எடுத்தால் தமிழ்நாட்டுக்கே விவசாயத்திற்கு விதை நெல் கிடைக்கும் என்பது உட்சபட்ச காமெடி. தமிழ்நாடு அறங்காவல் துறை வசம் உள்ள கோயில்களின் எண்ணிக்கையே 38,652 தான். ராஜகோபுரங்கள் அல்லது அதற்கு இணையான கோபுர கலசம் இருக்கும் கோயில்களில் மட்டுமே நெல் இருக்க வாய்ப்பு அதிகம்.  இதையே இரு மடங்காகக் கொண்டாலும் 70 ஆயிரம் கோயில் கலசத்திலிருந்து எடுத்து தமிழ்நாடு முழுக்க எப்படி விவசாயம் செய்ய முடியும்?

டி.இமானின் இசையில் வழக்கமாக மெலோடி இருக்கும். இதில் அதுவும் இல்லாதது இன்னொரு வருத்தம். தமிழன் என்று பெயர் வைத்து வந்தே மாதரம்… வந்தே மாதரம் சொல்கிறார்கள். கடைசியாக வில்லனைக் கொல்வதுதான் காப்பரேட்டுகளிடமிருந்து விவசாயத்தைக் காப்பாற்றுவது என்பதாக முடிகிறது.

இப்படிப் படத்தில் ஏகப்பட்ட ஓட்டைகள். பாகிஸ்தானிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றுவதுபோல காப்பரேட்டுகளிமிருந்து விவசாயத்தைக் காப்பாற்ற யோசித்தால் இப்படித்தான் ஆகும்போல.