“முதல்ல ஹாய் போட்டுட்டு அப்புறம் ஆட்டைய போட்டுட்டாளே” -பேஸ் புக் பெண்ணிடம் எட்டு லட்சம் இழந்த என்ஜினீயரின் கதை

 

“முதல்ல ஹாய் போட்டுட்டு அப்புறம் ஆட்டைய போட்டுட்டாளே” -பேஸ் புக் பெண்ணிடம் எட்டு லட்சம் இழந்த என்ஜினீயரின் கதை

ஒரு சமூக ஊடகத்தில் திடீரென அறிமுகமான பெண்ணிடம் எட்டு லட்ச ரூபாய் பணத்தை ஏமாந்த ஒரு கப்பல் என்ஜினீயரின் கண்ணீர் கதை பலருக்கு ஒரு பாடமாக இருக்கும்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகே ஒரு கப்பல் நிறுவனத்தில் பணிபுரியும் 42 வயதான பயந்தர் குடியிருப்பாளர் போர்ஜஸ் ,இந்த கொரானா காரணமாக தன்னுடைய கப்பல் பயணத்தை தள்ளி வைத்து விட்டு தன்னுடைய வீட்டில் ஆறு மாதமாக இருந்தார் .அந்த நேரத்தில் அவர் பேஸ் புக்கில் ஒரு என் ஆர் ஐ பெண் ரோஸ் என்ற பெண்ணோடு பழகினார் .முதலில் அந்த பெண் ‘ஹாய்’ சொல்லி தன்னுடைய நட்பை ஆரம்பித்தார் .பிறகு நாளுக்கு நாள் அவர்கள் நட்பு வேறு ரூட்டில் செல்ல ஆரம்பித்தது .பிறகு அந்த பெண்ணை அவர் விரைவில் தன்னுடைய கப்பல் வேலைக்கு சென்றதும் சந்திப்பதாக உறுதியளித்து , இருவரும் பேசி முடித்தனர் .
இந்நிலையில் திடீரென அந்த பெண் ரோஸ் அவரிடம் தன்னுடைய சகோதரி இந்த ஊரடங்கு காரணமாக் மும்பையில் சிக்கியுள்ளதால் அவர் செலவுக்கே பணமில்லாமல் சிரமப்படுவதாக கூறி அவரின் சகோதரி விவியன் கணக்குக்கு எட்டு லட்ச ரூபாய் அனுப்ப கேட்டார் .காதல் மயக்கத்திலிருந்த போர்ஜெஸ் அதை உண்மையென நம்பி அவரின் சகோதரி கணக்குக்கு எட்டு லட்ச ரூபாயினை அனுப்பினார் .பிறகு அந்த பணத்தை பெற்ற பிறகு அந்த பெண்ணும் அவரின் சகோதரியும் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டனர் .இதனால் தான் நன்றாக ஏமாற்றப்பட்டதையுணர்ந்த போர்ஜெஸ் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார் .போலிஸார் வழக்கு பதிவு செய்து அவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் சமூக ஊடக தகவல்கள் ஆகியவற்றை ஆராய்ந்து வருகிறார்கள்

“முதல்ல ஹாய் போட்டுட்டு அப்புறம் ஆட்டைய போட்டுட்டாளே” -பேஸ் புக் பெண்ணிடம் எட்டு லட்சம் இழந்த என்ஜினீயரின் கதை