65 ஆண்டு கால வரலாற்றில் பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டியது!

65 ஆண்டு கால வரலாற்றில் பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டியது!

1956ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட பவானிசாகர் அணை, கடந்த 65 ஆண்டு கால வரலாற்றில் 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. 2018, 2019 மற்றும் 2020 என தொடர்ந்து 3 ஆண்டுகள் 100 அடியை எட்டியுள்ளது.

65 ஆண்டு கால வரலாற்றில் பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டியது!

நீலகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கடந்த 3ம் தேதி 86 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், தினமும் 2 அடி உயர்ந்து இன்று 100 அடியை எட்டியுள்ளது. பவானிசாகர் அணை நீர்மட்டம் இரவு 9 மணி நிலவரப்படி 105 அடியாக அதிகரித்துள்ளது. அதேபோல் அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரத்து 453 கன அடியாகவும், நீர் திறப்பு 1000 கனஅடியாகவும் உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 28.69 டிஎம்சி ஆக உள்ளது.