பவானிசாகர் அணை நீர்மட்டம் 98 அடியாக சரிவு

 

பவானிசாகர் அணை நீர்மட்டம் 98 அடியாக சரிவு

வரத்தை காட்டிலும் அதிகளவு தண்ணீர் திறக்கப்படுவதால், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 98 அடியாக சரிவடைந்துள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால், அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 608 கனஅடி நீர் வந்துகொண்டுள்ளது.

பவானிசாகர் அணை நீர்மட்டம் 98 அடியாக சரிவு

அணையின் நீர்மட்டம் 98.97 அடியாக உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசனத்திற்காக வினாடிக்கு 700 கனஅடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக வினாடிக்கு 2,300 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரத்தை காட்டிலும் நீர்திறப்பு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம்
வேகமாக குறைந்து வருகிறது.
இதனிடையே நேற்று வரட்டுப்பள்ளம், பெரும்பள்ளம் உள்ளிட்ட அணை பகுதியில் மிதமான மழை பெய்தது.

பவானிசாகர் அணை நீர்மட்டம் 98 அடியாக சரிவு