பவானிசாகரில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்கு நீர்திறப்பு நிறுத்தம்

 

பவானிசாகரில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்கு நீர்திறப்பு நிறுத்தம்

ஈரோடு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாய விளை நிலங்களின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. இதன் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால், அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம், வரத்தை காட்டிலும், பாசனத்திற்காக அதிகள தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது.

பவானிசாகரில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்கு நீர்திறப்பு நிறுத்தம்

இந்த நிலையில், தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், காலை நேர நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 95.55 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 140 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 50 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி என மொத்தம் 2 ஆயிரத்து 350 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.