“முதல்வர் ஸ்டாலினுக்கு வாளை பரிசாக அளித்த பவானி தேவி” : வாழ்த்து கூறி வழியனுப்பியதாக நெகிழ்ச்சி!!

“முதல்வர் ஸ்டாலினுக்கு வாளை பரிசாக அளித்த பவானி தேவி” : வாழ்த்து கூறி வழியனுப்பியதாக நெகிழ்ச்சி!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23 ஆம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா தற்போது வரை 3 பதக்கங்களை வென்றுள்ளது. பளுதூக்குதல் பிரிவில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம், மகளிர் ஒற்றையர் பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெண்கலம், மகளிர் குத்துச்சண்டை போட்டியில் லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.

“முதல்வர் ஸ்டாலினுக்கு வாளை பரிசாக அளித்த பவானி தேவி” : வாழ்த்து கூறி வழியனுப்பியதாக நெகிழ்ச்சி!!

தமிழகத்திலிருந்து வாள் வீச்சு போட்டியில் கலந்துகொண்ட சென்ற பவானிதேவி இரண்டாவது சுற்று வரை முன்னேறி தோல்வியை தழுவினார். இதுகுறித்து அவர் என்னால் பதக்கம் வெல்ல முடியவில்லை; பிரான்சில் நடைபெறும் அடுத்த ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் பதக்கம் வெல்வேன் என்று உறுதியாக கூறியுள்ளார்.

“முதல்வர் ஸ்டாலினுக்கு வாளை பரிசாக அளித்த பவானி தேவி” : வாழ்த்து கூறி வழியனுப்பியதாக நெகிழ்ச்சி!!

இந்த சூழலில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி சந்தித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான் ஒலிம்பிக்கிற்கு செல்ல முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல உதவிகள் செய்தார். ஒலிம்பிக்கில் நான் பயன்படுத்திய வாளை பரிசாக வழங்கினேன் . அடுத்த ஒலிம்பிக்கில் இன்னும் சிறப்பாக செயல்பட இது உங்களுக்குப் பெரிதும் தேவைப்படும் என்று மீண்டும் எனக்கு பரிசளித்து விட்டார் என்று கூறினார். இந்த சந்திப்பின்போது விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.