• February
    23
    Sunday

Main Area

Main



‘96’ ரீமேக்: கன்னடத்தில் ஜானு யார் தெரியுமா?

trisha
trisha

சென்னை: விஜய் சேதுபதி-த்ரிஷா நடித்த ‘96’ திரைப்படத்தின் கன்னட ரீமேக்கில் ஜானு கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரேம்குமார் இயக்கிய ‘96’ திரைப்படம் பள்ளிப்பருவ காதலை மையப்படுத்தி வெளியானது. காதலர்கள் கொண்டாடித் தீர்த்த ‘96’ படத்தின் ராம், ஜானு கதாபாத்திரம் எதார்த்தமாக இருந்ததுடன், ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான படமாக அமைந்து வெற்றி பெற்றது.

96

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கன்னடத்தில் இதன் ரீமேக் உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ப்ரீதம் குபி இயக்கி வரும் இப்படத்தில் கன்னட கோல்டன் ஸ்டார் கணேஷ் நாயகனாக நடித்து வருகிறார். அர்ஜுன் சான்யா இசையமைக்கிறார்.

bhavana

‘99’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் த்ரிஷாவின் ‘ஜானு’ கேரக்டரில் பிரபல தென்னிந்திய நடிகை பாவனா நடிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கன்னடத்தில் ‘ரோமியோ’ என்ற படத்தில் பாவனாவும், கணேஷும் ஜோடி சேர்ந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. இவர்களது ஜோடி ‘99’ திரைப்படத்தில் நிச்சயம் ரசிகர்களை கவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

2018 TopTamilNews. All rights reserved.