தொடர்ந்து 2வது மாதமாக ஜியோவுக்கு ஷாக் கொடுத்த ஏர்டெல்…

 

தொடர்ந்து 2வது மாதமாக ஜியோவுக்கு ஷாக் கொடுத்த ஏர்டெல்…

பார்தி ஏர்டெல் தொடர்ந்து 2வது மாதமாக கடந்த அக்டோபரில் புதிய இணைப்புகளை வழங்கியதில் ஜியோவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை தக்கவைத்து கொண்டது.

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு சேவையில் இறங்கிய பிறகு தொலைத்தொடர்பு துறையில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. இலவச கால்கள், குறைந்த விலையில் மொபைல் டேட்டா போன்றவை ஜியோவின் வருகைக்கு பிறகே சாத்தியமானது. கடந்த 3 ஆண்டுகளாக ஜியோ அசூர வளர்ச்சி கண்டு வருகிறது. தற்போது 40 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களுடன் நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாக உள்ளது.

தொடர்ந்து 2வது மாதமாக ஜியோவுக்கு ஷாக் கொடுத்த ஏர்டெல்…
ஜியோ

யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் கடந்த 2 மாதங்களாக புதிய இணைப்புகளை வழங்கியதில் ஜியோ சரிவை சந்தித்துள்ளது. டிராய் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனம் 36.7 லட்சம் புதிய இணைப்புகளை வழங்கி முதல் இடத்தில் உள்ளது. அதேசமயம் ஜியோ நிறுவனம் அந்த மாதத்தில் புதிதாக 22 லட்சம் மொபைல் இணைப்புகளை மட்டுமே வழங்கியுள்ளது. பி.எஸ்.என்.எல்., வி.ஐ. (வோடாபோன் ஐடியா) மற்றும் எம்.டி.என்.எல். ஆகியவை அந்த மாதத்தில் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.

தொடர்ந்து 2வது மாதமாக ஜியோவுக்கு ஷாக் கொடுத்த ஏர்டெல்…
செல்போன் பயன்பாடு

புதிய இணைப்புகளை வழங்குவதில் பின்னுக்கு தள்ளப்பட்டாலும் மொத்த சந்தாதாரர்கள் அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்தான் முதலிடத்தில் உள்ளது. கடந்த அக்டோபர் இறுதி நிலவரப்படி, ரிலையன்ஸ் ஜியோ வசம் மொத்தம் 40.63 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். பார்தி ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவையை 33.02 கோடி சந்தாதாரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.