பார்தி ஏர்டெல் நிகர லாபம் ரூ.283.5 கோடி.. வருவாய் 4 சதவீதம் வளர்ச்சி

 

பார்தி ஏர்டெல் நிகர லாபம் ரூ.283.5 கோடி.. வருவாய் 4 சதவீதம் வளர்ச்சி

பார்தி ஏர்டெல் நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.283.5 கோடி ஈட்டியுள்ளது.
நாட்டின் 2வது மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான பார்தி ஏர்டெல் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.283.5 கோடி ஈட்டியுள்ளது. 2020 ஜூலை காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு ரூ.15,933 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.

பார்தி ஏர்டெல் நிகர லாபம் ரூ.283.5 கோடி.. வருவாய் 4 சதவீதம் வளர்ச்சி
பார்தி ஏர்டெல்

2021 ஜூலை காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனம் மொத்த வருவாயாக ரூ.26,853.6 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 4.3 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனம் மொத்த வருவாயாக ரூ.25,747 கோடி ஈட்டியிருந்தது. கடந்த ஜூலை காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு பயனாளர் வாயிலான சராசரி வருவாய் ரூ.146ஆக உயர்ந்துள்ளது. இது 2021 மார்ச் காலாண்டில் ரூ.145ஆக இருந்தது.

பார்தி ஏர்டெல் நிகர லாபம் ரூ.283.5 கோடி.. வருவாய் 4 சதவீதம் வளர்ச்சி
பார்தி ஏர்டெல்

மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகம் முடிவடைந்தபோது பார்தி ஏர்டெல் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.03 சதவீதம் சரிந்து ரூ.574.20ஆக இருந்தது.