விவசாயிகளுக்கு துரோகம் செய்த காங்கிரஸ்… விவசாய கடனை தள்ளுபடி செய்த பா.ஜ.க – ம.பி. துணை முதல்வர்

விவசாயிகளுக்கு துரோகம் செய்த காங்கிரஸ்… விவசாய கடனை தள்ளுபடி செய்த பா.ஜ.க – ம.பி. துணை முதல்வர்

வீடியோ
மத்திய பிரதேசத்தில் விவசாய கடன் தள்ளுபடி வாக்குறுதியை பா.ஜ.க. நிறைவேற்றியதாகவும், விவசாயிகளுக்கு காங்கிரஸ் துரோகம் செய்து விட்டதாகவும் அம்மாநில துணை முதல்வர் கோபால் பார்கவ் பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 6ம் தேதியன்று சாகர் மாவட்டம் ரஹத்கரில் பா.ஜ.க. தொண்டர்கள் சந்திப்பின்போது கோபால் பார்கவ் பேசியபோது எடுத்த வீடியோ அது.

விவசாயிகளுக்கு துரோகம் செய்த காங்கிரஸ்… விவசாய கடனை தள்ளுபடி செய்த பா.ஜ.க – ம.பி. துணை முதல்வர்
காங்கிரஸ்

வாக்குறுதி
கோபால் பார்கவ் அந்த வீடியோவில், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதாக காங்கிரஸ் வாக்குறுதி கொடுத்தது. ஆனால் உண்மையில் பா.ஜ.க. அரசுதான் ரூ.2 லட்சம் வரையிலான விவசாயிகளின் தள்ளுபடி செய்தது என பேசி இருந்தார். கடந்த வியாழக்கிழமையன்று முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், விவசாயிகளுக்கு உதவுவதில் காங்கிரஸ் ஏன் தோல்வியுற்றது என முன்னாள் முதல்வர் கமல்நாத் கேள்வி கேட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளுக்கு துரோகம் செய்த காங்கிரஸ்… விவசாய கடனை தள்ளுபடி செய்த பா.ஜ.க – ம.பி. துணை முதல்வர்
ராகுல் காந்தி

ராகுல் காந்தி
2018ல் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது, அங்கு தேர்தல் பிரச்சாரம் செய்த அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.2 லட்சம் வரையிலான விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி கொடுத்தார். மேலும் அப்படி செய்ய தவறினால் முதல்வர் தனது பதவியை இழப்பார் எனவும் ராகுல் காந்தி உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.