பிரதமர் முஸ்லிம்களை வெறுக்கிறார் என பேசிய ஷாமா முகமது மீது நடவடிக்கை எடுங்க.. காங்கிரசுக்கு பா.ஜ.க. நெருக்கடி

 

பிரதமர் முஸ்லிம்களை வெறுக்கிறார் என பேசிய ஷாமா முகமது மீது நடவடிக்கை எடுங்க.. காங்கிரசுக்கு பா.ஜ.க. நெருக்கடி

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷாமா முகமது. அவர் அண்மையில் டி.வி. விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, பாகிஸ்தானுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான கடுமையா நிலைப்பாட்டை கேள்வி எழுப்பினார். மேலும், பாகிஸ்தானுக்கு ஒரு பாடம் கற்பிக்கப்படும் என பிரதமர் மோடி பலமுறை கூறியுள்ளார். ஏனெனில் பாகிஸ்தான் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு என்பதால்? என பேசினார். பிரதமர் மோடிக்கு எதிராக வகுப்புவாத கருத்தை ஷாமா முகமது கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

பிரதமர் முஸ்லிம்களை வெறுக்கிறார் என பேசிய ஷாமா முகமது மீது நடவடிக்கை எடுங்க.. காங்கிரசுக்கு பா.ஜ.க. நெருக்கடி

பிரதமர் மோடி எதிராக பேசிய வார்த்தைகளை குற்றம்சாட்டி, ஷாமா முகமது மீது நடவடிக்கை எடுக்கும்படி காங்கிரஸை பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது. பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பிட் பத்ரா டிவிட்டரில் ஷாமா முகமது பேசிய வீடியோ கிளிப்பை பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் அந்த டிவிட்டில், நண்பர்களே, காங்கிரஸ் செய்திதொடர்பாளர் சொல்கிறார்… பாகிஸ்தானை மட்டும் மோடி மிரட்டுகிறார்.. ஏனென்றால் பாகிஸ்தான் முஸ்லிம் நாடு மற்றும் மோடி முஸ்லிம்களை வெறுக்கிறார்.. இதுதான் அம்மா மற்றும் மகனின் சிந்தனை என்றால் அவர்களை ஏன் ஜெய்சந்த் என்று அழைக்க கூடாது? என பதிவு செய்துள்ளார். (அவர் இந்தியில் பதிவு செய்ததை தோராயமாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது)

பிரதமர் முஸ்லிம்களை வெறுக்கிறார் என பேசிய ஷாமா முகமது மீது நடவடிக்கை எடுங்க.. காங்கிரசுக்கு பா.ஜ.க. நெருக்கடி

ஷாமா முகமதுவிடம் இது தொடர்பாக செய்தியாளர் அவரது தரப்பு பதிலை கேட்டதற்கு, எனக்கு எதிரான இந்த குப்பைக்கு நான் எந்த பதிலும் கொடுக்க மாட்டேன். மிக்க நன்றி என தெரிவித்தார். கேரளாவை சேர்ந்த ஷாமா முகமது ஒரு பல் மருத்துவர். 2015ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்