தெலங்கானா இடைத்தேர்தலில் மலர்ந்த தாமரை…. முதல்வர் சந்திரசேகர் ராவின் மெத்தனத்துக்கு அடி கொடுத்த பா.ஜ.க.

 

தெலங்கானா இடைத்தேர்தலில் மலர்ந்த தாமரை…. முதல்வர் சந்திரசேகர் ராவின் மெத்தனத்துக்கு அடி கொடுத்த பா.ஜ.க.

தெலங்கானாவில் இடைத்தேர்தல் நடந்த துப்பாக் சட்டப்பேரவை தொகுதியில் ஆளும் டி.ஆர்.எஸ். (தெலங்கானா ராஷ்டிர சமிதி) கட்சி வேட்பாளரை பா.ஜ.க. வேட்பாளர் தோற்கடித்தார். இதனையடுத்து அம்மாநில சட்டப்பேரவையில் பா.ஜ.க.வின் பலம் 2ஆக அதிகரித்துள்ளது.

தெலங்கானாவில் துப்பாக் சட்டப்பேரவை தொகுதி டி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ. ராமலிங்க ரெட்டி மரணம் அடைந்ததையடுத்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தெலங்கானா முதல்வரும், டி.ஆர்.எஸ். கட்சி தலைவருமான கே. சந்திரசேகர் ராவ் தனது கட்சி வேட்பாளராக மரணம் அடைந்த எம்.எல்.ஏ. ராமலிங்க ரெட்டியின் மனைவி சோலிபெட்டா சுஜாதாவை நிறுத்தினார். பா.ஜ.க. சார்பில் ரகுநந்தன் ராவ் வேட்பாளராக களம் இறங்கினார். காங்கிரஸ் சார்பில் செருகு ஸ்ரீனிவாஸ் ரெட்டி போட்டியிட்டார். துப்பாக் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று பா.ஜ.க. அனைத்து வழிகளிலும் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டது.

தெலங்கானா இடைத்தேர்தலில் மலர்ந்த தாமரை…. முதல்வர் சந்திரசேகர் ராவின் மெத்தனத்துக்கு அடி கொடுத்த பா.ஜ.க.
பா.ஜ.க.

அதேசமயம், இறந்த போன வேட்பாளரின் மனைவியை வேட்பாளராக நிறுத்தினால் தொகுதி மக்களின் அனுதாப ஓட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஒருபுறம், கடந்த 6 ஆண்டுகளில் எந்தவொரு இடைத்தேர்தலிலும் தோற்றது கிடையாது என்ற தைரியம் மறுபுறம் காரணமாக சோலிபெட்டா சுஜாதாவுக்கு ஆதரவாக சந்திரசேகர் ராவ் அந்த தொகுதியில் ஒருநாள் கூட பிரச்சாரம் செய்யவில்லை. மாறாக அந்த தொகுதியில் டி.ஆர்.எஸ். வேட்பாளரை வெற்றி பெற வைக்கும் டாஸ்க்கை தனது உறவினரும், அம்மாநில நிதியமைச்சருமான டி. ஹரிஷ் ராவிடம் ஒப்படைத்தார். இடைத்தேர்தல் கடந்த 3ம் தேதி நடந்தது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

தெலங்கானா இடைத்தேர்தலில் மலர்ந்த தாமரை…. முதல்வர் சந்திரசேகர் ராவின் மெத்தனத்துக்கு அடி கொடுத்த பா.ஜ.க.
ரகுநந்தன் ரெட்டி

இடைத்தேர்தல் முடிவு டி.ஆர்.எஸ். கட்சிக்கும், முதல்வர் சந்திரசேகர் ராவும் பெரிய இடியாக அமைந்து விட்டது. பா.ஜ.க. வேட்பாளர் ரகுநந்தன் ரெட்டி 1,470 வாக்குகள் வித்தியாசத்தில் டி.ஆர்.எஸ். வேட்பாளர் சோலிபெட்டா சுஜாதாவை தோற்கடித்தார். பா.ஜ.க. வெற்றியின் முதல்வர் சந்திரசேகர் ராவின் மெத்தனத்துக்கு கிடைத்த அடியாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் தெலங்கானாவில் பா.ஜ.க. ஆதிக்கம் செலுத்த தொடங்கி விட்டது என்பதை இது வெளிப்படுத்துகிறது. பா.ஜ.க. வேட்பாளர் ரகுநந்தன் ரெட்டி 62,772 வாக்குகள் பெற்றார். டி.ஆர்.எஸ். வேட்பாளர் சோலிபெட்டா சுஜாதா 61,302 வாக்குகளை மட்டுமே பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் செருகு ஸ்ரீனிவாஸ் 21,819 வாக்குகளுடன் 3வது இடத்தை பிடித்தார்.