நந்திகிராம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த சுவேந்து ஆதிகாரி.. மம்தாவை மக்கள் தோற்கடிப்பார்கள்

நந்திகிராம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த சுவேந்து ஆதிகாரி.. மம்தாவை மக்கள் தோற்கடிப்பார்கள்

மேற்கு வங்கத்தில் நந்திகிராம் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் சுவேந்து ஆதிகாரி வேட்புமனு தாக்கல் செய்தார்.

மேற்கு வங்கம் மாநிலம் நந்திகிராம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடுகிறார் சுவேந்து ஆதிகாரி. அவர் இன்று நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுதவற்காக வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக நந்திகிராமில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு அந்த பகுதி மக்களுடன் சுவேந்து ஆதிகாரி கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் சுவேந்து ஆதிகாரி கூறியதாவது:

நந்திகிராம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த சுவேந்து ஆதிகாரி.. மம்தாவை மக்கள் தோற்கடிப்பார்கள்
மம்தா பானர்ஜி

நந்திகிராம் மக்களுடனான எனது உறவு மிகவும் பழமையானது. தேர்தல்கள் வரும்போது ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் மேலாக மம்தா பானர்ஜி அவர்களை (நந்திகிராம் மக்கள்) நினைவு கூர்கிறார். அவர்கள் அவரை (மம்தாவை) தோற்கடிப்பார்கள். இன்று நானும் எனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறேன். நானும் இந்த பகுதியின் வாக்காளர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நந்திகிராம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த சுவேந்து ஆதிகாரி.. மம்தாவை மக்கள் தோற்கடிப்பார்கள்
பா.ஜ.க.

மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் இம்மாதம் 27ம் தேதி தொடங்கி மொத்தம் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தல் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையிலான நேரடி மோதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.