“இன்னொரு சங்கம் அவசியமாகிறது”.. புதிய தயாரிப்பாளர் சங்கம் ஆரம்பிக்க உள்ளதை அறிவித்தார் பாரதி ராஜா

 

“இன்னொரு சங்கம் அவசியமாகிறது”.. புதிய தயாரிப்பாளர் சங்கம் ஆரம்பிக்க உள்ளதை அறிவித்தார் பாரதி ராஜா

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் 1200-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். விரைவில் இந்தச் சங்கத்திற்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தயாரிப்பாளர் சங்கத்தில், தற்போது படம் தயாரிப்பவர்கள் என்று பட்டியலிட்டால் சுமார் 200 பேர்தான் இருப்பார்கள். மீதி அனைவருமே படம் எடுத்தவர்கள்தான், ஆனால் இப்போது படத் தயாரிப்பிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்கள். இதனால், படம் தயாரிப்பவர்களுக்கென ஒரு புதிய சங்கமொன்றை உருவாக உள்ளதாகவும் அந்த சங்கத்துக்கு பாரதிராஜா தலைவராக செயல்பட உள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகியது.

“இன்னொரு சங்கம் அவசியமாகிறது”.. புதிய தயாரிப்பாளர் சங்கம் ஆரம்பிக்க உள்ளதை அறிவித்தார் பாரதி ராஜா

இந்த நிலையில் புதிய தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தை தான் ஆரம்பிக்க உள்ளதாக இயக்குநர் பாரதிராஜா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்போதைய காலகட்டத்தில் இன்னொரு சங்கம் அவசியமாகிறது என்றும் தாய் சங்கத்தை உடைக்கவில்லை, பிரித்தெடுக்கவும் இல்லை, அவள் அப்படியே மெருகுற இருப்பாள் என்றும் ஒருமடை அடைத்துக் கொண்டால் மற்றொரு மடையை திறப்பது போல தான் இந்த சங்கம் தொடங்கப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், எவ்வளவுதான் காத்திருப்பது? அதனால் தான் தமிழ் திரைப்பட நடிப்பு, தயாரிப்பாளர் சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தறிந்து நிர்வாகிகள் குழு அறிவிக்கப்படும் என்றம் குறிப்பிட்டுள்ளார்.