தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்தின் டெண்டரை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு!

 

தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்தின் டெண்டரை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு!

தமிழகத்தில் உள்ள கிராமங்களுக்கு அதிவேக இன்டர்நெட் வழங்க பாரத்நெட் திட்டத்துக்கு டெண்டர் விடப்பட்டிருந்தது. மொத்தமாக 12,524 கிராம ஊராட்சிகளில் ரூ.1950 கோடிக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டது. அதுமட்டுமில்லாமல் ஊராட்சிகளில் ஃபைபர் கேபிள் மூலம் இன்டெர்நெட் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த டெண்டரில் முறைகேடு இருப்பதாக அறப்போர் இயக்கம், திமுக உள்ளிட்டவை குற்றம் சாட்டின. மேலும், நீதிமன்றத்திலும் இந்த டெண்டர் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்தின் டெண்டரை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு!

இந்த நிலையில், தமிழக ஊராட்சிகளில் இன்டர்நெட் வழங்கும் டெண்டரில் முறையான விதிமுறைகளை பாரத்நெட் பின்பற்றாததால், டெண்டரை ரத்து செய்து மத்திய வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. திட்டத்தை செயல்படுத்துவதற்கான கருவிகள் வாங்குவதில் குறைகள் இருப்பதாகவும் அதில் திருத்தம் செய்து மீண்டும் டெண்டரை விடுமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.