முறைகேடு காரணமாக பாரத் நெட் டெண்டர் ரத்து! – டி.டி.வி.தினகரன் வரவேற்பு

 

முறைகேடு காரணமாக பாரத் நெட் டெண்டர் ரத்து! – டி.டி.வி.தினகரன் வரவேற்பு

தமிழகம் முழுக்க கிராமப்புறங்களை ஃபைபர் ஆப்டிக் மூலம் இணைக்கும் பாரத் நெட் திட்டத்துக்கான டெண்டரில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், டெண்டர் விடப்படவில்லை என்று அ.தி.மு.க அரசு கூறி வந்தது. இந்த நிலையில் இந்த டெண்டரை மத்திய அரசு ரத்து உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முறைகேடு காரணமாக பாரத் நெட் டெண்டர் ரத்து! – டி.டி.வி.தினகரன் வரவேற்பு
இது குறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள ட்வீடில், “தமிழகத்தில் கிராம ஊராட்சிகளை இண்டர்நெட் மூலம் இணைப்பதற்காக ரூ.1,950 கோடிக்கு பழனிசாமி அரசு வெளியிட்டிருந்த பாரத் நெட் டெண்டரில் விதிமீறல் இருப்பது உறுதிசெய்யப்பட்டதால் மத்திய அரசு அந்த டெண்டரை ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களுக்காக இந்த டெண்டர் விதிமுறைகளை பழனிசாமி அரசு சட்ட விரோதமான முறையில் மாற்றியதாக பல்வேறு தரப்பினரும் எழுப்பிய குற்றச்சாட்டுகள் இதன் மூலம் உண்மையாகியிருக்கின்றன.

இது ஆரம்பம்தான்..! துறைகள் தோறும் பங்காளிகள், சம்பந்திகள் எனச் சுற்றத்திற்காக இஷ்டம் போல வாரி வழங்கப்பட்ட டெண்டர்களில் உள்ள முறைகேடுகள் இனி ஒவ்வொன்றாக வெளியில் வரும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.