தரணி ஆளக் கூடிய நட்சத்திரம் – ‘பரணி’ நட்சத்திரம் பொதுப் பலன்கள்

`பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்’ என்பது ஜோதிடத்துறையில் கூறப்படும் பழமொழி. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பல பேர் கூடியிருக்கும் இடத்தில் தனித்து தெரியக் கூடியவர்களாக இருப்பார்கள்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கலைகளில் சிறந்து விளங்கக் கூடியவர்களாக இருப்பார்கள். தங்களுடைய பெற்றோரிடம் அதிக பாசம் கொண்டவர்களாகவும், தான தர்மம் செய்வதில் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அத்துடன் தைரியசாலிகளாக இருப்பார்கள். பரணி நட்சத்திரக்காரர்களுக்கு இயல்பிலேயே ஆளுமைத் திறன் இருக்கிறது. ஆகவே அவர்களை தேடி அதிகாரப் பதவிகள் வரும். எதிலும் நேர்த்தியை கடைபிடிக்க கூடியவர்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவை ரசித்து ருசித்து சாப்பிடக் கூடியவர்கள். அதனால் அவர்களை `போஜனப் பிரியர்’ என்றே கூறலாம்.

astrology

பரணி நட்சத்திரக்காரர்கள் படிப்பில் அதிக ஆர்வம் உடையவர்களாகவும், எதையும் பகுத்தறியும் திறமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த பிரச்னையையும் எளிதாக கடந்து விடக் கூடியவர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இளம் பருவத்திலேயே செல்வமும், செல்வாக்கும் பெற்று விடுவார்கள். வயது முதிர்ந்த காலத்தில் கூட அனுபவத்தின் காரணமாக இவர்களை தேடி உயர்ந்த பதவிகள் வரும். மற்றவர்களின் பிரச்னைக்கு ஆலோசனை கூறி, அவர்களின் குறைகளை போக்க உதவி செய்வார்கள்!

Most Popular

“அதிமுக தலைமையில்தான் கூட்டணி இருக்கும்” : துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி திட்டவட்டம்!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற அலையே இன்னும் ஓயாத நிலையில் பாஜக தலைமையில் தான் தமிழகத்தில் கூட்டணி அமையும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் வி.பி. துரைசாமி கூறியிருப்பது அடுத்தகட்ட பரபரப்பை...

“ஒரு ரூபாய வச்சி ஓவர் நைட்ல பணக்காரன் ஆகுற ஹீரோ மாதிரி, 5 ரூபாய் இருந்தா நீங்களும் பணக்காரர்தான்” – எப்படியா?இப்படித்தான் படிங்க ..

பழைய பொருட்களை விற்கும் சில வெப்சைட்டுகளிடம் பழைய ஐந்து ரூபாய் கொடுத்தால் நீங்கள் கோடீஸ்வரன் ஆகலாம் . உங்ககிட்ட பழைய ஐந்து ரூபாய் நோட்டு ,அதுவும் 786 அப்படின்னு எண் முடியற மாதிரி இருக்கணும்...

திருவள்ளூரில் 18 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில் மற்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கூடி வருகிறது. கொரோனா வைரஸ்...

9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி விவகாரத்தில் காத்திருப்பு பட்டியலில் இருந்த அருண் பாலகோபாலன் சென்னை கிரைம் எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். தந்தை மகன் கொலை விவகாரத்தில்...
Do NOT follow this link or you will be banned from the site!