எச்சரிக்கை: ஆன்டிராய்டில் புதிய மால்வேர்… அத மட்டும் கிளிக் பண்ணிடாதீங்க… சோழி முடிஞ்சிரும்!

எச்சரிக்கை: ஆன்டிராய்டில் புதிய மால்வேர்… அத மட்டும் கிளிக் பண்ணிடாதீங்க… சோழி முடிஞ்சிரும்!

உலகமே டிஜிட்டல்மயம் ஆனாலும் ஆனது தனிமனித ரகசிய தகவல்களுக்கு எதிராக அபாயமும் எழுந்துவிட்டது. நமது தகவல் தொடர்பை எளிமையாக்குகிறது, உலகத்தைக் கைக்குள் அடக்கிறது என்ற சாதகங்கள் இருந்தாலும், அவ்வப்போது ஹேக்கர்கள் மால்வேர்கள் (கேடு விளைவிக்கும் சாப்ட்வேர்கள்) களமிறக்கப்பட்டு நமது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகின்றன. அந்த வரிசையில் தற்போது புதிய ஆன்டிராய்ட் மால்வேர் ஸ்மார்ட்போன்களுக்குள் நுழைந்திருக்கிறது. இதனை ஸ்மார்ட்போன்கள் பாதுகாப்பு நிறுவனமான Zimperium வெளிக்கொணர்ந்திருக்கிறது.

எச்சரிக்கை: ஆன்டிராய்டில் புதிய மால்வேர்… அத மட்டும் கிளிக் பண்ணிடாதீங்க… சோழி முடிஞ்சிரும்!

பொதுவாக ஸ்மார்ட்போன்கள் வெளியான பிறகு அந்தந்த நிறுவனங்கள், கோளாறுகளைச் சரிசெய்ய சிஸ்டம் அப்டேட் என்ற அம்சத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். அதன்படி மாதம் ஒருமுறையோ அல்லது குறிப்பிட்ட நாட்களில் சிஸ்டம் அப்டேட் செய்யுமாறு ஸ்மார்ட்போன்கள் உங்களுக்குப் பரிந்துரை செய்யும். நாமும் அதை கிளிக் செய்து ஆன்டிராய்ட் அப்டேட் செய்வோம். தற்போது ஹேக்கர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் அந்த புதிய மால்வேர் சிஸ்டம் அப்டேட் வடிவில் நுழைந்திருக்கிறது.

எச்சரிக்கை: ஆன்டிராய்டில் புதிய மால்வேர்… அத மட்டும் கிளிக் பண்ணிடாதீங்க… சோழி முடிஞ்சிரும்!

ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அனுப்பும் ஒரிஜினல் சிஸ்டம் அப்டேட் போலவே இருக்கும் மால்வேர், உங்களை சிஸ்டம் அப்டேட் செய்யுமாறு பணிக்கும். ஆனால் அது போலியான ஒன்று. அதை நீங்கள் கிளிக் செய்தால் உங்கள் ஸ்மார்ட்போனுக்குள் ஊடுருவி வாட்ஸ்அப் உள்ளிட்ட சாட் செயலிகள், போட்டோக்கள், வீடியோக்கள் ஆகியவற்றை தாக்கும். அதன்பின் அவை திருடப்படும். திருடப்பட்ட பின் ஹேக்கர் கும்பல் உங்களிடம் பணம் கேட்டு மிரட்டலாம்.

எச்சரிக்கை: ஆன்டிராய்டில் புதிய மால்வேர்… அத மட்டும் கிளிக் பண்ணிடாதீங்க… சோழி முடிஞ்சிரும்!

போலியான மால்வேர் ஒரிஜினலாக இருப்பது போல இருப்பதால் யாராலும் கண்டறிய முடியவில்லை. இதுவரை எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவலே தெரியவில்லை. அந்தளவிற்கு கோடிக்கணக்கோனோர் புதிய வகை மால்வேரால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே உங்கள் போனில் அப்டேட் குறித்த பாப்-அப் மெசெஜ் வந்தால் அதனை மறந்தும் கிளிக் செய்துவிடாதீர்கள். கிளிக் செய்தால் தேவையற்ற விபரீதங்களை நீங்கள் சந்திக்கக் கூடும். இதுமட்டுமில்லாமல் ஒருசில மூன்றாம் தர செயலிகளும் மால்வேர்களை கொண்டுள்ளன. அவற்றிலிருந்தும் உங்கள் போனையும் உங்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.