“அவங்க 1 கோடி பேர் உள்ள நுழைஞ்சிட்டாங்க… ஜாக்கிரதையா இருங்க” – பயமுறுத்தும் சீமான்!

“அவங்க 1 கோடி பேர் உள்ள நுழைஞ்சிட்டாங்க… ஜாக்கிரதையா இருங்க” – பயமுறுத்தும் சீமான்!

நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. நாம் தமிழரில் சீமான் மட்டுமே அறியப்படும் முகமாக இருப்பதால் அவரே அனைத்து வேட்பாளர்களுக்கும் ஆதரவாக வாக்கு சேகரித்துவருகிறார். பிரச்சாரத்தில் திமுக, அதிமுக கட்சிகளைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். இன்று போடிநாயக்கனூர் தொகுதியில் பிரேம்சந்தர், கம்பம் தொகுதியில் அனீஸ் பாத்திமா ஆகிய இருவருக்கும் ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

“அவங்க 1 கோடி பேர் உள்ள நுழைஞ்சிட்டாங்க… ஜாக்கிரதையா இருங்க” – பயமுறுத்தும் சீமான்!

போடி பிரச்சாரத்தில் பேசிய சீமான், “மாநிலத்தின் எல்லா உரிமைகளையும் மத்தியில் ஆளும் தேசிய கட்சியிடம் பறி கொடுத்துவிட்டு அவர்களுக்கு திராவிடக் கட்சிகள் ஆதரவு கொடுத்து வருகின்றன. வேலைவாய்ப்பு, தொழில் காரணமாக தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வட இந்தியர்கள் குடிபெயர்ந்துள்ளனர். இவர்களிடம் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்களின் வாய்ப்பை தட்டிப் பறிப்பார்கள். அதற்கு நாம் தமிழர் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்” என்றார்.

“அவங்க 1 கோடி பேர் உள்ள நுழைஞ்சிட்டாங்க… ஜாக்கிரதையா இருங்க” – பயமுறுத்தும் சீமான்!

சீமான் சொல்வது போல் வேலைவாய்ப்புக்காகவும் வயிற்றுப் பிழைப்புக்காகவும் பல லட்சக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களின் சொந்த மாநிலங்களில் கிடைக்கும் வருமானத்தை விட இங்கு கிடைக்கும் சொற்ப வருமானமும் அவர்களுக்கு அதிகமாகத் தெரிகிறது. சொந்த மாநிலங்களில் பட்டினியாய் கிடந்து சாவதை விட தமிழகத்தில் மாடாய் உழைத்து நிம்மதியாக சோறு சாப்பிடலாம் என்பதே அவர்களின் எண்ணவோட்டமாக இருக்கிறது.

“அவங்க 1 கோடி பேர் உள்ள நுழைஞ்சிட்டாங்க… ஜாக்கிரதையா இருங்க” – பயமுறுத்தும் சீமான்!

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் தான் அதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவர்களால் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைவதாகக் குற்றச்சாட்டு எழுகிறது. அதேபோல தமிழகத்தில் அரங்கேறிவரும் நிறைய குற்றங்களுக்கு வெளிமாநில தொழிலாளர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டின் விளைவாகவே தமிழகத்தில் இருக்கும் தனியார் நிறுவனங்களில் 75% தமிழர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக வாக்குறுதி கொடுத்துள்ளது.