உஷார்!ஊடகத்தில் ஊடுருவியுள்ள கடத்தல் கூட்டம் -குழந்தைகளை குறிவைக்கும் கும்பல் -சைபர் கிரைம் போலீசின் எச்சரிக்கை..

உஷார்!ஊடகத்தில் ஊடுருவியுள்ள கடத்தல் கூட்டம் -குழந்தைகளை குறிவைக்கும் கும்பல் -சைபர் கிரைம் போலீசின் எச்சரிக்கை..

கொரானா பரவல் காரணமாக இப்போது பள்ளிகளும் ,கல்லூரிகளும் விடுமுறை விடப்பட்டுள்ளதால் ,மாணவர்கள் ,சிறுவர் ,சிறுமிகள் இப்போது எந்நேரமும் இணையதளங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர் .இதன் காரணமாக இப்போது ஊடகங்களில் நிறைய சமூக விரோத கும்பல் ஊடுருவி சிறுவர் ,சிறுமிகளை குறிவைத்து கடத்தல் ,மார்பிங் செய்யப்பட்ட படங்கள் ,மற்றும் மோசடியான விளையாட்டுகள் மூலம் பணம்பறிக்க திட்டமிட்டுள்ளார்கள் என்று மகாராஷ்டிரா சைபர் க்ரைம் போலீசார் அங்குள்ள பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் .இதனால் பெற்றோர்கள் குழந்தைகளை கண்காணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள் .

உஷார்!ஊடகத்தில் ஊடுருவியுள்ள கடத்தல் கூட்டம் -குழந்தைகளை குறிவைக்கும் கும்பல் -சைபர் கிரைம் போலீசின் எச்சரிக்கை..
பெற்றோர்கள் வேலைக்கு சென்று விடுவதால் ,சிறுவர் சிறுமிகள் வீட்டில் தனியாக இணைய தளங்களில் உலா வருகிறார்கள் ,இது அந்த சமூக விரோத கும்பலுக்கு வசதியாக உள்ளது .
அவர்கள் சமுக வலைதளத்தில் குழந்தைகளுடன் நட்பு கொள்கிறார்கள் ,பிறகு அவர்களின் மார்ப் செய்யப்பட்ட படங்களை பதிவிறக்கம் செய்து அவர்களை மிரட்டுகிறார்கள் .மேலும் சில பொறியியல் தந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பம் மூலம் குழந்தைகள் கடத்தப்பட்டு ,பெற்றோர்களிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள்.
இதனால் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் இணைய தள செயல்பாடுகளை பற்றி அடிக்கடி கண்காணித்துக்கொண்டிருக்கவேண்டுமெனவும் ,ஏதாவது சந்தேகத்திற்கிடமாக தோன்றினால் உடனே அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டுமென சைபர் க்ரைம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர் .

உஷார்!ஊடகத்தில் ஊடுருவியுள்ள கடத்தல் கூட்டம் -குழந்தைகளை குறிவைக்கும் கும்பல் -சைபர் கிரைம் போலீசின் எச்சரிக்கை..