Home க்ரைம் பங்களாக்கள் ஜாக்கிரதை! விமானத்தில் வந்திறங்கிய கொலம்பிய கொள்ளையர்கள்! திடுக்கிடும் தகவல்கள்!

பங்களாக்கள் ஜாக்கிரதை! விமானத்தில் வந்திறங்கிய கொலம்பிய கொள்ளையர்கள்! திடுக்கிடும் தகவல்கள்!

தமிழக, பெங்களூர் போலீசாருக்கு சவாலாக இருந்து வந்த கொலம்பிய கொள்ளையர்கள் சிக்கினர். பிடிபட்ட மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

பெங்களூரு நகைக்கடை ஒன்றில் கொள்ளையடிக்க முயன்ற மூன்று பேரை பெங்களூரு போலீசா மடக்கி பிடித்தனர். இளம்பெண் உட்பட மூவரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கொலம்பியா நாட்டைச்சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. கொள்ளை அடிப்பதற்காகவே கொலம்பியாவில் இருந்து விமானத்தில் வந்திருப்பதை விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

போலீசார் அவர்களிடம் துருவித்துருவி விசாரித்ததில், பெங்களூருவில் 31 இடங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தின் குற்றவாளிகள் இக்கும்பல்தான் என்று தெரியவந்ததும், போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

இத்தனை வழக்குகளிலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல், இத்தனை நாளும் திணறிக்கொண்டிருந்த போலீசாருக்கு நிம்மதி பெருமூச்சு வராமல் என்ன செய்யும்.

செல்போன் ஜாமர், வாக்கிடாக்கி என்று ஹைடெக்காக கொள்ளையடித்து வந்த கும்பலை பிடிப்பதே சவாலாக இருந்து வந்தது. பங்களா வீடுகள், நகைக்கடைகளை நோட்டமிட்டு ஆள் நடமாட்டம் அறிந்துவரும் வேலைகளை செய்திருக்கிறார் இளம்பெண். பின்னர் எளிதில் பூட்டை உடைத்துவிடும் நவீன கருவிகளைக்கொண்டு ஆண்கள் பங்களாவுக்குள் சென்று நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு வந்துள்ளனர்.

செல்போன் சிக்னல் காட்டிக்கொடுக்காமல் இருக்க செல்போன் ஜாமர், கொள்ளையர்கள் தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள வாக்கி டாக்கி, நவீன பூட்டை உடைக்கும் நவீன கருவிகள் எல்லாம் கண்டு மிரண்டு போயிருக்கிறார்கள் போலீசார்.

கொள்ளையர்களையும், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகளையும் பெங்களூர் போலீசார் காட்சிப்படுத்தி இருந்தனர். இது மீடியாக்களில் வெளியானதைக்கண்ட , சேலம் சூரமங்கலத்தில் நகைக்கடை நடத்தி வரும் ஸ்ரீபாஸ்யம், நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்.

பெங்களூருவில் காட்சிப்படுத்திய பெரும்பாலான நகைகள் தனது நகைக்கடை நகைகள் என்பதால்தான் அந்த பெருமூச்சு. இதை உடனே அவர் சூரமங்கலம் போலீசாருக்கு தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் மாதம் ஸ்ரீபாஸ்யம் நகைக்கடையில், 2.25 கிலோ நகைகள், 57 கேரட் வைரங்கள், 6 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் 400 வெளிநாட்டு டாலர்கள் கொள்ளை போன சம்பவத்தில், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், 80 பழைய குற்றவாளிகளின் கைரேகையோடு ஒப்பிட்டுப்பார்த்தும் துப்பு துலங்காமல் கடந்த 9 மாதங்களா திணறிக்கொண்டிருந்த சூரமங்கலம் போலீசாருக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.
உடனே அவர்கள் பெங்களூரு விரைந்து சென்று, தக்க ஆவணங்களை காட்டி அது ஸ்ரீபாஸ்யம் நகைகள் என்பதை காட்டி மீட்டுள்ளனர்.

பிடிபட்ட கொலம்பிய கொள்ளையர்களிடம் தமிழக, பெங்களூரு போலீசார் மேற்கொண்டு விசாரணையை தொடர்கின்றனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, திருப்பத்தூரில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர்...

சூரரைப் போற்று படத்தின் ட்ரெய்லர் வெளியீடு தேதி அறிவிப்பு!

இறுதிச்சுற்று படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நடிகை அபர்ணா பாலமுரளி, ஜாக்கி...

ஐபிஎல்: 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட்டின் 42வது ஆட்டத்தில் , மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி...

வாயை கொடுத்து பெண்ணிடம் வாங்கி கட்டிக்கொண்ட காவலர்

மும்பை கல்பதா தேவி சாலையில் உள்ள காட்டன் எக்ஸ்சேஞ்ச் நாகா அருகே நேற்று டூவிலரில் வந்த பெண் ஹெல்மெட் அணியாததால் டிராபிக் போலீசார் ஏக்நாத் பார்த்தே, அப்பெண்ணின் டூவீலரை நிறுத்தி...
Do NOT follow this link or you will be banned from the site!