தோனி இல்லாத பெஸ்ட் ஐபிஎல் டீமா? – பட்டியல் போட்டது இவரா?

தோனி இல்லாத பெஸ்ட்  ஐபிஎல் டீமா? – பட்டியல் போட்டது இவரா?

ஐபிஎல் திருவிழாவுக்கு இன்னும் மூன்றே நாட்கள்தான் இருக்கின்றன. ரசிகர்கள் சிக்ஸர்களும் ஃபோர்களும் த்ரில் சேஸ்ஸிங்களுக்கும் காத்து கிடைக்கின்றனர்.

சனிக்கிழமை தொடங்கும் ஐபிஎல் திருவிழாவில் முதல் போட்டியில் தல தோனியின் படையான சென்னை சூப்பர் கிங்ஸூம், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இண்டியன்ஸூம் மோதுகின்றன.

தோனி இல்லாத பெஸ்ட்  ஐபிஎல் டீமா? – பட்டியல் போட்டது இவரா?

ஒவ்வோர் அணியும் தங்கள் வெற்றிக்கான வியூகத்தை தீவிரமாக வகுத்து வருகின்றன. முன்னாள் வீரர்கள் இந்த அணிக்குத்தான் கோப்பை….. இல்லை இல்ல… இந்த அணியே வெல்லும் என தங்கள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.  இதில் பெரும்பாலோனவர்களின் சாய்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ். அதற்கு முக்கியக் காரணம் தோனியின் கேப்டன்ஷிப். ஆனால், வெளிநாட்டு வீரர் தனது பெஸ்ட் ஐபிஎல் டீம் பட்டியலில் வெளியிட்டிருக்கிறார். அதில் தோனியின் பெயரே இல்லை.

தோனி இல்லாத பெஸ்ட்  ஐபிஎல் டீமா? – பட்டியல் போட்டது இவரா?

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக். மிகத் திறமையான ஸ்பின் பவுலர். ஒருநாள் போட்டிகளில் 183 விக்கெட்டுகளை வீழ்த்தியவர். ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடரஸ் அணியிலும் இடம் பிடித்தவர்.

பிராட் ஹாக் தயாரித்த பட்டியலில்தான் தோனி பெயர் இல்லை. தோனி மட்டுமல்ல, டிவில்லியர்ஸ், கிறிஸ் கெயில் பெயர்களும் இல்லை. சரி, வேறு யார் யாரெல்லாம் இடம்பிடித்திருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

தோனி இல்லாத பெஸ்ட்  ஐபிஎல் டீமா? – பட்டியல் போட்டது இவரா?

பிராட் ஹாக்கின் பெஸ்ட் ஐபிஎல் டீமின் கேப்டன் யார் தெரியுமா? நியுசிலாந்து வீரர்  கேன் வில்லியம்ஸ்.

தோனி இல்லாத பெஸ்ட்  ஐபிஎல் டீமா? – பட்டியல் போட்டது இவரா?

ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக, டேவிட் வார்னரும், ரோஹித் சர்மாவும் இறங்குவார்களாம். மூன்றாம் இடம் விராட் கோலிக்கு. தோனி இறங்கும் நான்காம் இடம் கேன் வில்லியம்ஸ்க்கு. ஐந்து ஆறாம் இடங்களில் ரிஷப் பண்ட், ஆன்ரே ரஸல் இறங்க வேண்டுமாம்.

தோனி இல்லாத பெஸ்ட்  ஐபிஎல் டீமா? – பட்டியல் போட்டது இவரா?

ஏழாம் இடத்தில் ரவிந்திர ஜடேஜாவும், சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன் எட்டாம் இடத்திலும் அதற்கு அடுத்து வரிசையாக, சோஹல், புவனேஷ்குமார், பும்ரா என்று பட்டியல் வெளியிட்டிருக்கிறார்.