பெங்களூருவில் அதிர்ச்சி சம்வம்: சாலையில் சரிந்த கொரோனா நோயாளி… 2 மணி நேர தாமதமாக வந்த ஆம்புலன்ஸ்!

 

பெங்களூருவில் அதிர்ச்சி சம்வம்: சாலையில் சரிந்த கொரோனா நோயாளி… 2 மணி நேர தாமதமாக வந்த ஆம்புலன்ஸ்!

பெங்களூருவில் கொரோனா நோயாளி ஒருவருக்கு உடல்நிலை மோசமடையவே மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் உதவி கேட்கப்பட்டது. ஆனால், 2 மணி நேரம் தாமதமாக வந்ததால் அந்த நபர் இறந்தார். அவரது உடல் சாலையில் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் கொரேனாவால் இறந்த 55 வயது நபரின் உடல் சாலையில் கிடக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வந்தது. இது குறித்து விசாரித்தபோது, “அந்த நபருக்கு கொரோனா நோய்த் தொற்று இருந்துள்ளது.

பெங்களூருவில் அதிர்ச்சி சம்வம்: சாலையில் சரிந்த கொரோனா நோயாளி… 2 மணி நேர தாமதமாக வந்த ஆம்புலன்ஸ்!

பெங்களூருவில் அதிர்ச்சி சம்வம்: சாலையில் சரிந்த கொரோனா நோயாளி… 2 மணி நேர தாமதமாக வந்த ஆம்புலன்ஸ்!

வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்து வந்துள்ளார். அவரது நிலைமை மோசமாகவே மருத்துவமனையைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் அனுப்பும்படி கேட்டுள்ளார். ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமாகவே, குடும்பத்தினர் அவரை ஆட்டோ ரிக்‌ஷாவில் கூட்டிக்கொண்டு மருத்துவமனை செல்ல முடிவு செய்து அழைத்துவந்தனர். வீட்டைவிட்டு வெளியே வந்தபோது நிலைமை மோசமடைந்து சாலையில் சரிந்துவிழுந்தார். அவர் உடல் சாலையில் அப்படியே கிடந்துள்ளது.

இரண்டு மணி நேர தாமதத்துக்குப் பிறகு அவரை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வந்துள்ளது. இந்த சம்பவம் பெங்களூரு மக்களை அதிர்ச்சியடை செய்துள்ளது.
சம்பவம் நடந்த பகுதிக்கான கொரோனா தடுப்பு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் அசோக் இது குறித்து கூறுகையில், “இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனி இது போன்ற சம்பவம் நடைபெறுவதைத் தடுக்க இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

பெங்களூருவில் அதிர்ச்சி சம்வம்: சாலையில் சரிந்த கொரோனா நோயாளி… 2 மணி நேர தாமதமாக வந்த ஆம்புலன்ஸ்!பெங்களூரு நகரத்தில் கொரோனாத் தொற்று வேகமாக பரவி வருகிறது. வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 994 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை பெங்களூரு நகரத்தில் 7173 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகி உள்ளது. இதில் 106 பேர் உயிரிழந்துள்ளனர்.