தினமும் 9 மணி நேரம் தூங்க நீங்க ரெடியா? ரூ.1 லட்சம் கொடுக்க நாங்க ரெடி? பெங்களூரு நிறுவனம் அறிவிப்பு..

 

தினமும் 9 மணி நேரம் தூங்க நீங்க ரெடியா? ரூ.1 லட்சம் கொடுக்க நாங்க ரெடி? பெங்களூரு நிறுவனம் அறிவிப்பு..

தொடர்ந்து 100 நாட்கள் தினமும் 9 மணி நேரம் உறங்குபவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என பெங்களூரை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நவீன உலகத்தில் பெரும்பாலானவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தூக்கத்தை தொலைத்து வேலை வேலையென ஒடிக் கொண்டு இருக்கிறார்கள். உறக்கம் எவ்வளவு முக்கியமானது, அதனை இழப்பதால் ஏற்படும் இழப்புகளை எல்லாம் அவர்கள் கண்டு கொள்வதில்லை. மேலும் சில சமயங்களில் நன்றாக உறங்குபவர்களுக்கு சோம்பேறி என்ற பட்டத்தையும் எளிதாக கொடுத்து விடுகின்றனர். இந்த சூழ்நிலையில் தூக்கத்தின் மகத்துவதை உணர்த்தும் நோக்கில், தினமும் 9 மணி நேரம் ஆழ்ந்து உறங்கினால் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமும் 9 மணி நேரம் தூங்க நீங்க ரெடியா? ரூ.1 லட்சம் கொடுக்க நாங்க ரெடி? பெங்களூரு நிறுவனம் அறிவிப்பு..
வேக்பிட்

பெங்களூரை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான வேக்பிட், 2021 ஆண்டுக்கான ஸ்லீப் இன்டர்ன்ஷிப் என்ற தூங்கும் பணிக்கான அறிவிப்பை தனது வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது. அதாவது இந்த பணியில் சேருபவர்கள் தொடர்ந்து 100 நாட்கள் தினமும் 9 மணி நேரம் நன்றாக தூங்கி எழ வேண்டும். 100 நாட்களும் இதனை வெற்றிகரமாக செய்து முடித்தால் அவர்களுக்கு இன்டர்ன்ஷிப் கட்டணமாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.

தினமும் 9 மணி நேரம் தூங்க நீங்க ரெடியா? ரூ.1 லட்சம் கொடுக்க நாங்க ரெடி? பெங்களூரு நிறுவனம் அறிவிப்பு..
தூக்கம்

வேக்பிட் நிறுவனம் ஏற்கனவே ஸ்லீப் இன்டர்ன்ஷிப்பை கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடத்தியது. அப்போது தூங்குவதற்கு நாங்க ரெடி என சுமார் 1.70 லட்சம் பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். ஆனால் அதில் 23 பேரால் மட்டுமே வெற்றிகரமாக செய்ய முடிந்தது. வேக்பிட் நிறுவனம் இது குறித்து கூறுகையில், இதில் கலந்து கொள்பவர்களுக்கு ஆலோசர்களின் வசதியும் கிடைக்கும், அத்துடன் தேர்வாளர்களுக்கு தூக்க டிராக்கர்ஸ் வழங்கப்படும், இந்த இன்டர்ஷிப்பை முடிக்க முடிந்தவர்களுக்கு மட்டுமே முழு பணம் வழங்கப்படும் என தெரிவித்தது. கொரோனா லாக்டவுன் காலத்தில் வீட்டை விட்டு செல்ல முடியாமல் உறங்கியே காலத்தை கழித்தவர்கள் அந்த அனுபவத்தை பயன்படுத்தி இந்த ஸ்லீப் இன்டர்ன்ஷிப்பில் கலந்து கொண்டு ரூ.1 லட்சத்தை பெற முயற்சிக்கலாம்.