கட்சி, அமைச்சர் பதவியை துறந்த லக்ஷ்மி ரத்தன் சுக்லா.. மம்தா பானர்ஜிக்கு அடுத்த அடி.. பின்னணியில் பா.ஜ.க.?

 

கட்சி, அமைச்சர் பதவியை துறந்த லக்ஷ்மி ரத்தன் சுக்லா.. மம்தா பானர்ஜிக்கு அடுத்த அடி.. பின்னணியில் பா.ஜ.க.?

மேற்கு வங்கத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார துறை அமைச்சராக இருந்த லக்ஷ்மி ரத்தன் சுக்லா தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் அம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் மம்தா கட்சியிலிருந்து எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் பா.ஜ.க. பக்கம் தாவி வருகின்றனர். இது மம்தாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் மேற்கு வங்க அமைச்சராக இருந்த சுவேந்து ஆதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க.வில் இணைந்து விட்டார்.

கட்சி, அமைச்சர் பதவியை துறந்த லக்ஷ்மி ரத்தன் சுக்லா.. மம்தா பானர்ஜிக்கு அடுத்த அடி.. பின்னணியில் பா.ஜ.க.?
திரிணாமுல் காங்கிரஸ்

இந்த சூழ்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், மேற்கு வங்க விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத் துறை அமைச்சருமான லக்ஷ்மி ரத்தன் சுக்லா நேற்று திடீரென தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அந்த கட்சியிலிருந்தும் விலகினார் இதனையடுத்து சுக்லா பா.ஜ.க.வுக்கு தாவ போகிறார் என்று ஒரு செய்தி தீயாக பரவியது. இந்நிலையில், சுக்லா விளையாட்டை தொடர விரும்புவதால் ராஜினாமா செய்துள்ளார் என்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கம் கொடுத்தார்.

கட்சி, அமைச்சர் பதவியை துறந்த லக்ஷ்மி ரத்தன் சுக்லா.. மம்தா பானர்ஜிக்கு அடுத்த அடி.. பின்னணியில் பா.ஜ.க.?
மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி இது தொடர்பாக கூறுகையில், லக்ஷ்மி ஒரு நல்ல பையன். அவர் எழுதிய கடிதத்தில், முழு மனதுடன் விளையாட்டை தொடர விரும்புவதாகவும், கட்சியில் உள்ள அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுபட விரும்புகிறேன் என்று தெரிவித்து இருந்தார். அவர் அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்வது குறித்து பேசவில்லை. ஆனால் அவரது ராஜினாமாவை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று கவர்னருக்கு நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம். சட்டப்பேரவையின் தற்போதைய பதவிக்காலம் முடியும் வரை தொடர்ந்து உறுப்பினராக இருப்பேன் என்று லஷ்மி கூறியுள்ளார். அவர் விளையாட்டுக்கு அதிக நேரம் கொடுக்க விரும்புகிறார் அதனால் அவர் அரசியலை விட்டு வெளியேற விரும்புகிறார். இதற்கு மேல் எதுவும் இல்லை. அவருக்கு எனது வாழ்த்துக்கள். இங்கு தவறான புரிதலுக்கு இடமில்லை என்று தெரிவித்தார்.