ரயில்வே மகாராஷ்டிராவிலிருந்து மேற்கு வங்கத்துக்கு கொரோனாவை பரப்புகிறது… மம்தா குற்றச்சாட்டு…

 

ரயில்வே மகாராஷ்டிராவிலிருந்து மேற்கு வங்கத்துக்கு கொரோனாவை பரப்புகிறது… மம்தா குற்றச்சாட்டு…

மேற்கு வங்கு அரசு கொரோனா வைரஸை கட்டுப்படுத்த படாதபாடு பட்டு வருகிறது. இந்நிலையில் அண்மையில் அம்பன் புயல் ஏற்படுத்தி சென்ற பெரிய பாதிப்பும் அம்மாநிலத்துக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் அம்மாநிலத்துக்கு வருவது பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில், மாநிலத்தில் கொரோனா வைரஸை பரப்புவதாக ரயில்வே மீது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியு்ளளார். அதில் அவா் கூறியதாவது:

ரயில்வே மகாராஷ்டிராவிலிருந்து மேற்கு வங்கத்துக்கு கொரோனாவை பரப்புகிறது… மம்தா குற்றச்சாட்டு…

நாடு முழுவதிலிருந்து மேங்கு வங்கத்துக்கு மொத்தம் 225 ரயில்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கொரோனா வைரஸ் நோயாளிகள் அதிகம் உள்ள மகாராஷ்டிராவிலிருந்து 41 ரயில்கள் வர உள்ளன. இதுவரை 19 ரயில்கள் மட்டுமே வந்துள்ளன. அனைத்து ரயில்களும் வந்து சேரும்போது கொரோனா வைரஸ் பாதிப்பு வெடிப்பு ஏற்படும் என மாநில அரசு பயப்படுகிறது. ரயில்வே இதை ஏன் செய்கிறது என எனக்கு தெரியவில்லை?நான் எப்படி 2 லட்சம் புலம்பெயர்ந்தவர்களை பரிசோதனை செய்ய முடியும். மத்திய அரசு உதவுமா? அரசியல் எல்லாவற்றையும் முந்தியுள்ளது. நான் கொரோனா, புயல் அல்லது அரசியலை எதை நான் எதிர்த்து போராட? இது எல்லாம் அதிகம்.

ரயில்வே மகாராஷ்டிராவிலிருந்து மேற்கு வங்கத்துக்கு கொரோனாவை பரப்புகிறது… மம்தா குற்றச்சாட்டு…

நாங்கள் புலம்பெயர்ந்தவர்கள் ரயில்களுக்கான பட்டியல் மற்றும் அட்டவணையையும் கொடுத்து இருந்தோம். ஆனால் திடீரென நேற்று 36 ரயில்கள் மேங்கு வங்கத்துக்கு புறப்படுவதாக கூறப்பட்டது. மகாராஷ்டிரா கூட இது பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது என்கிறது. அவர்கள் அரசியலை தொடங்கியுள்ளனர். ரயில்களில் ஏன் சமூக விலகலை பின்பற்றபடவில்லை. நாங்கள் டிக்கெட்டுக்கு பணம் செலுத்துகிறோம். ஆனால் பெட்டிகளில் ஏன் அதிகளவில் பயணிகள்? நீங்கள் மகாராஷ்டிராவை வெளியேற்றி மற்றும் மேற்கு வங்கத்தில் கொரோனா வைரஸை பரப்புகிறீர்கள். அரசியல் ரீதியாக என்னை அவர்கள் (பா.ஜ.க.) தொந்தரவு செய்யலாம். அவர்கள் ஏன் மாநிலத்துக்கு தீங்கு விளைவிக்க வேண்டும். ஷ்ராமிக் ரயில்களை அனுப்புவது குறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆகையால் மேற்கு வங்கத்தில் கோவிட்-19 பாதிப்புகளில் எந்தவிதமா உயர்வும் இருக்காது. இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட வேண்டும்.