விநாயகரை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்!

 

விநாயகரை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்!

இந்துக்களின் முழு முதல் கடவுளாக விநாயகர் உள்ளார். விநாயகர் படமோ விக்ரகமோ இல்லாத இந்துக்கள் வீடுகளே இல்லை என்று கூறலாம். தடைகளை, விக்கினங்களை நீக்குபவராக விநாயகர் உள்ளதால் அனைவரின் இஷ்ட தெய்வமாக விநாயகர் உள்ளார். யானை தலை, தந்தம், மிகப்பெரிய காது, மனித உடல், வாகனமாக சின்னஞ்சிறிய எலி என அனைத்தும் விநாயகரை பிடிக்க காரணமாக உள்ளன. எந்த ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் விநாயகரை வழிபட்டுத் தொடங்குவது நல்லது.

விநாயகரை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்!

வீட்டில் விநாயகரை வைத்து வழிபடத் திங்கட்கிழமை சிறந்த நாளாகும். ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தி தினத்தில் விநாயகருக்கு சிறப்புப் பூஜைகள் செய்வது சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும். இது தவிர மாதம் தோறும் வரும் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி தினங்களில் சிறப்புப் பூஜை, விரதம் போன்றவற்றை மேற்கொள்வது சிறந்த பலனைத் தரும்.

நம் ஒவ்வொருவருக்கும் ஆரோக்கியம் மற்றும் சுபிக்‌ஷமான வாழ்க்கை வாழ பிடிக்கும். விநாயகரை வழிபடுவது சுபிக்‌ஷம், ஆரோக்கியம் மற்றும் வெற்றியைப் பெற்றுத் தரும். இலக்குகளை நோக்கிய பயணம் வெற்றிகரமாக அமைய விநாயகர் வழிபாடு துணை செய்யும்.

தன்னை வழிபடுபவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை அருள்பவர் விநாயகர். நல்ல அதிர்ஷ்டம், வளம் பெற்று வாழ விரும்பினால் விநாயகரை வணக்கினாலே போதும். தன்னை வணங்குபவர்களை வெறும் கையுடன் அனுப்பும் பழக்கம் விநாயகருக்கு இல்லை.

யானைத் தலையுடன் இருக்கும் விநாயகர் ஞானத்தின் பிறப்பிடமாக பார்க்கப்படுகிறார். விநாயகரை வழிபடுவது ஞானம், அறிவுத்திறன் மேம்பட உதவும்.

விக்கினங்களை நீக்குபவர் விநாயகர். முழு நம்பிக்கையுடன் விநாயகரை வழிபட்டு, சரியான பாதையில் நடப்பவர்களுக்கு எந்த ஒரு தடையும் வராது. விநாயகர் துணையாக நின்று பயத்தை நீக்கி, தடைகளை விலக்கி, வெற்றிக்கு வழிகாட்டுவார்.

விநாயகர் அமைதியாக நம்முடைய விண்ணப்பங்களைக் கேட்கும் கடவுளாக இருக்கிறார். அவரை அமைதியாக, ஆழ்ந்து வணங்கினால் நம்முடைய உள்மன ஆற்றலைப் புரிந்துகொண்டு அடுத்த நிலைக்கு முன்னேறலாம். விநாயகர் நம்முடைய ஆன்மாவைத் தூய்மைப்படுத்துபவராக உள்ளார். விநாயகரை வணங்கி வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக நம்மைச் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்கள் விலகி, மனம் அமைதி மற்றும் தூய்மை அடையும். அனைத்துக்கும் மேலாக அமைதியான வாழ்வை வாழும் ஆசியை விநாயகர் அருள்வார்!