தினமும் யோகா செய்வதால் கிடைக்கக் கூடிய 5 பலன்கள்!

 

தினமும் யோகா செய்வதால் கிடைக்கக் கூடிய 5 பலன்கள்!

யோகா என்பது உடலையும் உள்ளத்தையும் உறுதி செய்யும் பண்டைய கால வழிமுறையாகும். மூச்சுப் பயிற்சியோடு உடல் பயிற்சியும் இணைந்து செய்யும் போது உடல் புத்துணர்வு பெறும். யோகா செய்வதால் ஏராளமான பலன்கள் உள்ளன. பொதுவான அறிவியல் பூர்வமான 5 பலன்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்!

தினமும் யோகா செய்வதால் கிடைக்கக் கூடிய 5 பலன்கள்!

1. மன அழுத்தம் குறையும்

யோகா மன அழுத்தத்தைப் போக்கி மனதுக்கு ஓய்வளிக்கும் தன்மை கொண்டது. பல்வேறு ஆய்வுகள் யோகா செய்பவர்களுக்கு கார்டிசோல் எனப்படும் மன அழுத்தத்துக்குக் காரணமான ஹார்மோன் சுரப்பு குறைந்திருப்பதை உறுதி செய்துள்ளது.

2. உடல் உறுதியாகும், போலன்ஸ் மற்றும் வளைந்துகொடுக்கும் தன்மை அதிகரிக்கும்.

சில பயிற்சிகள் நன்கு முச்சை இழுத்துச் செய்யும்போது உடல் முழுவதும் ரத்த ஓட்டம் பாயத் துணை செய்கிறது. இது உடலை உறுதி செய்வதுடன், உடலின் வலைந்துகொடுக்கும் தன்மையையும் அதிகரிக்கச் செய்கிறது.

3. இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்கிறது

நம்முடைய உடல் முழுவதும் ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை ரத்தம் கொண்டு சேர்க்கிறது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் யோகா செய்யும் 40 வயதானவர்களிடம் ஆய்வு செய்தபோது அவர்களுக்கு ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பது தெரியவந்தது. இது மாரடைப்பு, பக்கவாதத்துக்கான வாய்ப்பைக் குறைப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மற்றொரு ஆய்வில் இதய நோய் பாதிப்பு உள்ள 113 பேருக்கு ஒரு ஆண்டுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. ஓராண்டு முடிவில் அவர்களுக்கு மொத்த கொழுப்பு அளவு 23 சதவிகிதம் அளவுக்கும், கெட்ட கொழுப்பு அளவு 26 சதவிகிதம் அளவுக்கும் குறைந்திருப்பதைக் கண்டறிந்தனர். மேலும் 47 சதவிகித நோயாளிகளுக்கு இதய நோய் பாதிப்பு மறைந்துவிட்டதையும் கண்டறிந்துள்ளனர்.

தினமும் யோகா செய்வதால் கிடைக்கக் கூடிய 5 பலன்கள்!

4. வாழ்க்கைத் தரம் அதிகரிக்கும்

தொடர்ந்து யோகா செய்பவர்களுக்கு மன அழுத்தம் குறைகிறது. உடல் சோர்வு போன்ற பிரச்னை ஏற்படுவது இல்லை. இதனால் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரமும் அதிகரிப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஆய்வாளர்கள் 135 பேர் கொண்ட இரண்டு குழுக்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். முதல் குழுவுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. மற்றொரு குழுவுக்கு யோகா வழங்கப்படவில்லை. ஆறு மாத முடிவில் யோகா செய்து வந்த குழுவினர் மத்தியில் சோர்வு, மன அழுத்தம் பிரச்னை மிகப் பெரிய அளவில் குறைந்திருந்தது.

5. நல்ல தூக்கம் வரும்

சரியான தூக்கமின்மைதான் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைக்கு காரணமாகிறது. யோகா செய்பவர்களுக்கு சரியான நேரத்துக்கு தூங்கச் செல்வது, படுத்ததும் ஆழ்ந்த தூக்கம் வருவது உள்ளிட்டவை அதிக அளவில் உள்ளது.