சொட்டையான இடத்தில் சுருளாக முடிவளர்ந்து, சுருட்டைன்னு கூப்பிட வைக்கும் இந்த இலை

 

சொட்டையான இடத்தில் சுருளாக முடிவளர்ந்து, சுருட்டைன்னு கூப்பிட வைக்கும் இந்த இலை

சொட்டையான இடத்தில் சுருளாக முடிவளர்ந்து, சுருட்டைன்னு கூப்பிட வைக்கும் இந்த இலை

வில்வ இலையில் நிறைய உடலுக்கு நன்மை தரும் குணமிருக்கிறது .இது சர்க்கரை நோய் முதல் புற்று நோய் வரை தடுக்கும் வல்லமை கொண்டதால்தான் சிவனுக்கு இதை வைத்து பூஜை செய்கிறார்கள் .மேலும் இது குணப்படுத்த உதவும் நோய்களை பற்றி பார்க்கலாம்

முடி உதிர்தல்:

இன்றைய காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தான் இந்த முடி உதிர்தல். சிறு வயதிலே முடி கொட்டி விடுவதால் நமக்கு மனஅழுத்தம் மற்றும் வயதான தோற்றம் ஏற்படுகிறது. இதில் இருந்து விடுபட இந்த வில்வ இலை மிக சிறந்த மருந்தாக செயல்படும். இதற்க்கு வில்வ காயை எடுத்து அரைத்து அதனுடன் பால் கலந்து நம்முடைய தலைக்கு தேய்த்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நமக்கு கண் எரிச்சல். மற்றும்

முடி உதிர்தல் நீங்கும்.

கரும்புள்ளி நீங்கும்:

நம்முடைய முகத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க நாம் அப்பள வழிமுறைகளை பின்பற்றுவோம். அதற்க்கு இது ஒரு சிறந்த மருந்தாக இருக்கும்.இதற்க்கு வில்வ காயை எடுத்து அதன் சதை பகுதியை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். அதில் பால் கலந்து அந்த கலவையை முகத்தில் தடவி வந்தால் நம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்

தலைவலிக்கு மருந்து உள்ளுக்கு எடுப்பதை காட்டிலும் வெளிப்புறத்தில் தான் அதிகமாக பயன்படுத்தினார்கள் நம் முன்னோர்கள். தலைவலி பற்று என்று சொல்லக்கூடிய இந்த வைத்தியம் குறித்து நாம் பார்த்திருந்தாலும் வில்வ இலையும் பற்றுக்கு உதவும்.

தலைவலி, சைனஸ், கண்களில் நீர்வடிதல் போன்றவை தலைவலியோடு இருந்தால் அது அதிக உபாதை தரும். அப்போது வில்வ இலை அருகில் இருந்தால் அதை கொண்டே நீங்கள் உங்கள் உபாதையை பெருமளவு குறைக்க முடியும். வில்வ இலையை சாறு வெளியேறாமல் இடித்து மசித்து நெற்றியில் பற்று போடவும்.

தலைவலி இருக்கும் போது படுத்தபடி பற்று போட்டு பிறகு சாறு முழுக்க நெற்றியில் வடிந்ததும் துடைத்தால் தலைவலி குறையும்.