சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் முளைக் கட்டிய வெந்தயம் தயாரிப்பது எப்படி?

 

சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் முளைக் கட்டிய வெந்தயம் தயாரிப்பது எப்படி?

நம்முடைய உணவில் சுவைக்காக சேர்க்கப்படும் பொருள் வெந்தயம். அது வெறும் உணவுப் பொருள் மட்டுமல்ல, உயிர் காக்கும் மருந்தும் கூட. அதில் உள்ள அதிகப்படியான ஊட்டச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவது வரை பல்வேறு பாதிப்புகளைக் கட்டுப்படுத்த உதவி நம்மைக் காக்கிறது. வெந்தையத்தை முளைக்கட்ட விட்டு அதன் பிறகு பயன்படுத்தும்போது அதன் ஆற்றல் இன்னும் அதிகரிக்கிறது.

சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் முளைக் கட்டிய வெந்தயம் தயாரிப்பது எப்படி?

முளைக்கட்டிய வெந்தயத்தைத் தயாரிப்பது எப்படி?

வெந்தயத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு ஊற விட வேண்டும். இரவு முழுவதும் தண்ணீரில் ஊறிய பிறகு, காலையில் அந்த தண்ணீரை வடிகட்டி எடுத்துவிட வேண்டும். இந்த தண்ணீர் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதால் இதையும் வெறும் வயிற்றில் அருந்துவது நல்லது. தொடர்ந்து வெந்தய நீரை அருந்தி வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படுவதுடன் உடல் எடையும் குறையும்.

தண்ணீர் நன்கு வடிகட்டியதும் அதை ஒரு துணியில் போட்டு நன்கு கட்டி உலர்வான இடத்தில் கட்டி தொங்க விட வேண்டும்.

அடுத்த நாள் காலையில் அந்த துணியை நன்கு அலச வேண்டும். பிறகு அதைத் தொங்கவிட்டுவிட வேண்டும். அவ்வப்போது அந்த துணியின் மீது தண்ணீர் தெளித்து வர வேண்டும்.

இப்படி ஐந்து நாட்கள் செய்துகொண்டே வந்தால் அந்த துணிக்குள் வெந்தயம் முளை விட்டு செடியாக வளர தொடங்கியிருக்கும். இந்த முளை விட்ட வெந்தயத்தை அப்படியே சமைத்துச் சாப்பிடலாம். சாலட்டில் போட்டு சாப்பிடலாம். நிழலில் உலர்த்தி அதை பொடித்து தினமும் எடுத்துக்கொள்ளலாம்.

இந்த முளை விட்ட வெந்தயம் ரத்தத்தில் சர்க்கரை அளவு கலக்கும் வேகத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் திடீரென்று சர்க்கரை அளவு அதிகரிப்பது தடுக்கப்படுகிறது.

இதில் உள்ள பாலிபீனல், ஃபிளவனாய்ட்ஸ், அல்கலாய்ட்ஸ் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. இது மிகச் சிறந்த ஆண்டி பாக்டீரியல், ஆன்டி இன்ஃபிளமேட்டரியாகவும் செயல்பட்டு உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

இதில் உள்ள பொட்டாசியமானது உடலில் சோடியம் அளவு கட்டுக்குள் இருக்க உதவுகிறது. இதன் காரணமாக ரத்த அழுத்தம், கொழுப்பு அளவு குறைகிறது. இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.