இதயத்தை காக்கும் இதழ்கள் .

 

இதயத்தை காக்கும் இதழ்கள் .

இதயத்தை காக்கும் இதழ்கள் .

தாமரை மலர்கள் சித்தா ,ஆயுர்வேதம் போன்ற வைத்திய முறைகளில் மிகவும் போற்றப்படுகிறது .இதன் இதழ்கள் இதயத்தை பலப்படுத்தி அதை காக்கும் வலிமை கொண்டது என்று கண்டுபிடித்துள்ளார்கள் .


தாமரை மலர்கள் உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாக , ஆயுர்வேத மருத்துவத்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இதற்கு காரணம் தாமரை மலர்களில் லினோலிக் அமிலம், புரோட்டீன், பாஸ்பரஸ், இரும்புசத்து, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி போன்றவை காணப்படுகின்றன.
பொதுவாக மூலிகைகளின் பலனை அறிய ஒரு வழி இருக்கிறது . அதாவது ஒரு மூலிகை வடிவில் மனித உறுப்பில் எது ஒத்து இருக்கிறதோ, அந்த உறுப்புக்கு அந்த மூலிகை நிவாரணமாக பயன்படும் என்று ஆயுர்வேத மருத்துவ நூல்கள் கூறுகின்றன.
அதேப்போல் மூடிய தாமரை,இதயத்தின் வடிவில் இருப்பதால் அது இதயத்தை வலுவாக்கும்.மேலும் தாமரை தண்டுகள் நார்சத்து நிரம்பியவை. இதில் விட்டமின் சி, பொட்டசியம், பாஸ்பரஸ், விட்டமின் B 6 ,தாமிர சத்து இவைகளுடன் மாங்கனீஸ் அடங்கியுள்ளது .இதில் மிக முக்கியமானது இதில் சக்கரையும் கொழுப்பும் சிறிது கூட இல்லை.
மேலும் தாமரை மலர்களின் இதழ்களை நிழலில் காயவைத்து அவைகளை கஷாயம் செய்து சாப்பிட்டால் இதய நோய்கள் கட்டுப்படும் .
தாமரை மலரின் நடுவில் இருக்கும் மகரந்த பகுதியை உடைத்துப் பார்த்தால் அதனுள் விதைகள் காணப்படும் .இவைகள் மிகக்கடினமாக இருக்கும் .இந்த விதைகளை உடைத்து அதில் இருக்கும் பருப்பை சாப்பிட இதய நோய் தீரும் ,இதயம் பலப்படும்,அதுமட்டுமல்லாமல் .சிறுநீரகங்களை வலுப்படுத்தும்.