வேகமா வெயிட்டை குறைக்க வச்சி ,நோய்களை வச்சி செய்யும் லிச்சி பழம்.

 

வேகமா வெயிட்டை குறைக்க வச்சி ,நோய்களை வச்சி செய்யும் லிச்சி பழம்.

வேகமா வெயிட்டை குறைக்க வச்சி ,நோய்களை வச்சி செய்யும் லிச்சி பழம்.

கோடையில் கிடைக்கும் லிச்சிப் பழத்தை உட்கொள்வதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. இதனால் இதனை உட்கொண்டால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.மேலும் லிச்சி பழத்தில் தொப்பையை குறைக்க கூடிய காரணிகள் இருப்பதாக கண்டுபிடித்து உள்ளனர். லிச்சி பழம் நம் வயிற்றுக்குள் உள்ள கெட்ட கிருமிகளை அழிக்கிறது.

லிச்சிப் பழத்தில்  புற்றுநோய் எதிர்ப்பு பொருள் உள்ளதால், இதனை உட்கொண்டால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயில் இருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும். லிச்சி பழத்தை அதிகம் உட்கொண்டு வருபவர்களுக்கு, இதய நோய்கள் வரும் வாய்ப்பு குறையும்.

லிச்சி பழத்தில் உள்ள பைட்டோ-கெமிக்கல்கள், செல்களின் அசாதாரண வளர்ச்சியைத் தடுப்பதோடு, கண் புரை ஏற்படுவதையும் தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

லிச்சி பழத்தில் விட்டமின் சி அதிகம் உள்ளது. மேலும் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்து காணப்படுகிறது. லிச்சி பழத்தில் அதிகப்படியான நீர்ச்சத்து இருப்பதால் வெயில் காலத்தில் இதனை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.

மற்ற பழங்களை விட இதில் பாலிஃபீனால் அதிகமாக இருக்கிறது. இதனால் இதய சம்பந்தப்பட்ட நோய்கள் நமக்கு வராமல் தடுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். புற்றுநோய் மட்டுமல்லாமல் நீரிழிவு நோய் போன்ற பிரச்சனைகளுக்கும் லிச்சி பழம் நல்ல தீர்வாக இருக்கிறது.