வெந்நீர் அருந்தினால் இந்த பலன்கள் எல்லாம் கிடைக்கும்!

 

வெந்நீர் அருந்தினால் இந்த பலன்கள் எல்லாம் கிடைக்கும்!

நாம் அருந்தும் நீர் அது எந்த தட்பவெப்பநிலையில் இருக்கிறது என்பதைப் பொருத்து பலன்கள் மாறும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குளிர்ந்த நீராக, அறை வெப்பநிலையில் உள்ள தண்ணீராக, குளிர்ந்த நீராக நாம் அருந்தும் தண்ணீர் தாகத்தைத் தணிக்கிறது, உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை வழங்குகிறது. இது தவிர வேறு என்ன பலன்கள் என்பதைப் பார்ப்போம்.

வெந்நீர் அருந்தினால் இந்த பலன்கள் எல்லாம் கிடைக்கும்!

வெந்நீர் அருந்தும் போது அதில் இருந்து வரும் நீராவி கூட நம்முடைய சுவாசப் பாதையில் உள்ள தடைகளை நீக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெந்நீர் சூடாகத் தொண்டைக்குள் இறங்கும்போது சைனஸ், தொண்டை பகுதியில் உள்ள சுரப்புக்களை வெளியேற்ற உதவுகிறது.

வெந்நீர் அருந்துவது செரிமானத்தை மேம்படுத்துகிறது. சூடாக தண்ணீர் இரைப்பை, சிறுகுடலுக்குள் பாயும் போது அழுக்கு, நச்சுக்கள் அடித்துக்கொண்டு செல்கின்றன. மலச்சிக்கல் பிரச்னை நீங்குகிறது.

போதுமான தண்ணீர் அருந்தவில்லை என்றால் நம்முடைய மூளை, மைய நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். வெந்நீர் அருந்துவதால் மகிழ்ச்சியான, புத்துணர்வான மனநிலை நமக்குக் கிடைக்கும்.

மூளை நரம்பு மண்டலத்தை வெந்நீர் தூண்டுவதால் மன அழுத்தம், மனப் பதற்றம் போன்ற பிரச்னைகள் குறைகிறது. தினமும் குறைந்த அளவில் தண்ணீர், வெந்நீர் அருந்துவது மூளையின் ரசாயன செயல்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வெந்நீர் அருந்தும் போது ரத்த ஓட்டம் சீராகிறது. ரத்தக் குழாய்கள் நன்கு விரிவடைகின்றன. இதனால் சருமத்துக்கு அடியில் வரை ரத்த ஓட்டம் நன்றாக கிடைக்கிறது. சருமத்துக்கு போதுமான அளவு ரத்த ஓட்டம் கிடைப்பதன் மூலம் சருமப் பகுதியில் தேங்கியிருக்கும் நச்சுக்கள் வெளியேற்றப்படுகின்றன. சருமம் பொலிவாகிறது.

பசியின்மையால் அவதியுறுபவர்கள் தினமும் வெந்நீர் குடிக்க வேண்டும். அது செரிமான மண்டலத்தை தூண்டி பசி உணர்வை ஏற்படுத்த உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் அருந்தி வந்தால் உடல் எடை குறையும். காலையில் வெந்நீர் அருந்துவது சிறுகுடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களைத் தூண்டுகிறது.

வெந்நீர் வாய், பற்களின் ஆரோக்கியத்தையும் காக்க உதவுகிறது. வெந்நீர் அருந்தும்போது வாயில் பெருக்கம் அடைந்த பாக்டீரியாக்கள் அகற்றப்படுகின்றன. இதனால், பற்சிதைவு, ஈறு பாதிப்பு அகற்றப்படுகிறது. வாய் துர்நாற்ற பிரச்னை நீங்குகிறது.