விளக்கெண்ணெய் குளியல் : அப்படி அதுல என்ன ஸ்பெஷல்?

 

விளக்கெண்ணெய் குளியல் : அப்படி அதுல என்ன ஸ்பெஷல்?

பொதுவாக குளியலுக்கு பயன்படுத்தப்படுவது நல்லெண்ணெய். உடல் சூட்டை தணிக்க நல்லெண்ணெயை நன்றாக தேய்த்துக் கொண்டு, ஊற வைத்து விட்டு குளிர்ப்பார்கள். ஆனால்? இது என்ன விளக்கெண்ணெய் குளியல்? கசப்புத் தன்மையுடன் அடர்த்தியாக பிசு பிசுவென இருக்கும் அந்த எண்ணெயை குளியலுக்கு பயன்படுத்தலாமா? என்றெல்லாம் உங்களுக்கு தோன்றும். ஆம், விளக்கெண்ணெயையும் குளியலுக்கு பயன்படுத்தலாம். அதன் நன்மைகளை பற்றி இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.

விளக்கெண்ணெய் குளியல் : அப்படி அதுல என்ன ஸ்பெஷல்?

விளக்கெண்ணெய் இயற்கையாகவே நற்குணங்களைக் கொண்டது. இதை தேய்த்துக் குளித்தால் உடலில் சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். சருமத்தின் நிறத்தை இது மேம்படுத்துவதோடு நல்ல உறக்கத்திற்கு உதவுகிறது. உடல் வலியை போக்குவதற்காகவே பலர் ஸ்பாக்களுக்கு செல்கின்றனர். பழங்காலத்தில் அபயங்கா எனப்படும் ஆயில் மசாஜ் மிக பிரபலமாக இருந்ததாம்.

விளக்கெண்ணெய் குளியல் : அப்படி அதுல என்ன ஸ்பெஷல்?

உடல் முழுவதும் விளக்கெண்ணெயை கொண்டு மசாஜ் செய்யும் போது ரத்த ஓட்டம் நன்கு அதிகரிக்கும். அது உடல் வலியை நீக்கி புத்துணர்ச்சி பெறச்செய்யும். அதே போல, தசை மற்றும் திசுக்களை வளர்ச்சி அடையச் செய்து நல்ல தூக்கம் வர உதவுகிறது. சரும பிரச்னைகளை கூட நீக்கும். சருமத்தை மென்மையாக்க செய்வதோடு வயதான விளைவுகளையும் குறைக்கும்.

சருமத்துக்கு என்ன நன்மைகள்?

வடுக்கள் நீங்கும்: உடலில் ஏற்படும் காயம் ஆறிப்போனாலும் அது வடுவாக இருக்கும். அதை போக்குவதற்கு விளக்கெண்ணய் குளியல் பயன்படுகிறது. முன்னர் குறிப்பிட்டது போல இது திசுக்களை உடைப்பதால், உடலில் இருக்கும் வடுக்கல் தானாக நீங்கி விடும்.

விளக்கெண்ணெய் குளியல் : அப்படி அதுல என்ன ஸ்பெஷல்?

ஈரப்பதம்: சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாக்க தற்போது பல மாய்சுரைசர் கிரீம்கள் விற்கப்படுகின்றன. மாய்சுரைசராக விளக்கெண்ணெய் சிறப்பாக செயல்படும். தேங்காய் எண்ணெயை போல. விளக்கெண்ணெய் தேய்த்து குளிக்கும் போது நம் சருமத்தில் இருக்கும் ஒலிக், லினோலிக் என்ற அமிலங்கள் சுரந்து வறட்சியை கட்டுப்படுத்தும்.

விளக்கெண்ணெய் குளியல் : அப்படி அதுல என்ன ஸ்பெஷல்?

தோல் நோய்கள்: சரும நோய்களுள் முக்கியமானது முகப்பரு. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. நம் முகத்தில் இருக்கும் பாக்டீரியாக்கள் ஒன்று சேரும் போது முகப்பரு உருவாகும் நிலையில் அதை போக்க பாடுபட வேண்டியிருக்கும். இதற்கு சரியான தீர்வளிக்கிறது விளக்கெண்ணய் குளியல். இது உடல் சூட்டை தணித்து முகப்பருக்கள் வரமால் தடுக்கும். அதே போல, முகப்பருக்களில் இருக்கும் பாக்டீரியாக்களை நீக்கி முகப்பருவை போக்க உதவும். இதுமட்டுமில்லாமல் இதில் இருக்கும் ஆண்டி மைக்ரோபியல் தன்மை தோல் நோய்கள் வராமல் தடுக்கிறது.

விளக்கெண்ணெய் குளியல் : அப்படி அதுல என்ன ஸ்பெஷல்?

பயன்படுத்தும் முறை:

உச்சந்தலையில் சிறிது விளக்கெண்ணெயை எண்ணெயை வைத்து பொறுமையாக மசாஜ் செய்யுங்கள். பின்னர் அப்படியே உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். மசாஜ் செய்யும் போது எண்ணெய் சிறிது சூடாக இருத்தல் சிறந்தது. 10 முதல் 15 நிமிடங்கள் மசாஜ் செய்த பிறகு சிறிது நேரம் ஊறவைத்து விட்டு குளித்து விடலாம். குளித்த உடன் சோர்வாக இருக்கும் என்பதால் வார இறுதியில் விளக்கெண்ணய் குளியலை செய்யலாம். குளியலின் போது 50 மில்லி அளவுக்கு மட்டுமே விளக்கெண்ணயை பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்..!