Home ஆன்மிகம் ஒளியை தரும் விளக்கை துலக்குவதால் ஏற்படும் பலன்கள்

ஒளியை தரும் விளக்கை துலக்குவதால் ஏற்படும் பலன்கள்

குடிக் கொண்டிருக்கும் தெய்வ அம்சம் பொருந்திய குத்து விளக்கைத் துலக்கி சுத்தப்படுத்துவதற்கு குறிப்பிட்ட நாள்கள் இருக்கின்றன.
குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் துலக்குவது நல்லது. இதற்கு காரணம் இருகின்றது. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி குடியிருக்கிறால். செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை துலக்கினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பது ஐதீகம்.

வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநிதி யட்சணி குடியேறுகிறால். எனவே வெள்ளிக்கிழமை துலக்குவதைத் தவிர்த்து, வியாழன் முன்னிரவில் துலக்குவது நல்லது.


விளக்கை முதலில் நீரால் கழுவிப் பின்பு எண்ணெய்ப் பிசுக்கு நீங்கும் வண்ணம் தேங்காய் நார் கொண்டு பச்சைப்பயறு, வெந்தயம், பச்சரிசி, எலுமிச்சைத் தோல் சேர்த்து அரைத்த சிகைக்காய்ப் பொடி போட்டுத் தேய்க்கலாம். பின்பு, எலுமிச்சைச்சாறு ஊற்றி சுத்தப்படுத்தித் தண்ணீர் ஊற்றி நன்கு சுத்தப்படுத்த படுத்தலாம். அல்லது, புளியை நன்கு ஊறவைத்து அதனுடன் சபீனாவையும் சேர்த்து தேய்த்து சுத்தப்படுத்தலாம்.

இவ்வுலகில் இருளை நீக்கி, ஒளியை தந்து, உலக உயிர்களை உயிர்ப்புடன் வைக்கும் சூரிய பகவானுக்குரிய ஞாயிற்றுக்கிழமை குத்து விளக்கை துலக்குவதால், கண்கள் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் நீங்கிவிடும். பிரகாசமான பார்வை கிடைக்கப்பெறும்.

மனதுக்கு அதிபதியான மனதுக்காரனான சந்திர பகவானுக்குரிய நாளான திங்கள்கிழமை துலக்குவதால், மன இறுக்கம் நீங்கி ஒரு தெளிவு உண்டாகும்.

எந்த குழப்பமும் இல்லாமல் தீர்க்கமான முடிவெடுக்கும் தன்மை மேலோங்கி காணப்படும். நாம் செய்யும் நல்லது கெட்டதுகளை சரிசெய்து நம்மை நல்வழிப்படுத்தும் குருவுக்குரிய நாளான வியாழக்கிழமை துலக்கினால், குருவின் பார்வையால் கோடி புண்ணியம் கிடைப்பதோடு, மன நிம்மதி கிடைக்கும்.

ஸ்ரீ ராம பக்தன் அனுமன் தன் வாழ்நாள் முழுவதும் ராம நாமத்தையே ஜெபித்தார். ராம நாமம் சொன்னாலே பாவங்கள் தீரும். மரணத்தின் விளிம்பிற்கு செல்பவர்கள்கூட நலன் பெறுவார்கள். ஸ்ரீராம பக்தன் அனுமன் ஓயாமல் ராமநாமம் சொன்னதால் தான் கடலைத் தாண்ட முடிந்தது. முடியாததையும் முடித்து வைப்பது ராமநாமம். ராமருக்கும், ராமபக்தனுக்குரிய சனிக்கிழமை துலக்கினால், விபத்து நேர இருப்பதை தவிர்த்துக் கொள்ள உதவிகரமாக இருக்கும். இழந்த பொருட்களை திரும்பப் பெறும் பாக்கியமும் உண்டாகும். இதேபோல் அன்றைய தினம் வரும் பஞ்சமி திதியில் குத்து விளக்கை துலக்குவதன் மூலம் அகால மரணம் ஏற்படுவதை தடுக்கக்கூடிய பலன் உண்டு என்று கூறப்படுகிறது.

-வித்யா ராஜா

மாவட்ட செய்திகள்

Most Popular

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி… எதிர்கால தொழில்நுட்பங்கள் ஆசியாவிலிருந்து வர வேண்டும்… மோடி

நம் நாட்டில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்ச்சிக்காக ரூ.1,000 கோடி மதிப்பில் சிறப்பு நிதியை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்...

சாலையோர டீ கடைக்குள் புகுந்த மினி ஆட்டோ… பெண் உள்பட 5 பேர் படுகாயம்…

திருப்பத்தூர் ஆம்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து ஓடிய மினி ஆட்டோ ஒன்று, சாலையோர டீ கடைக்குள் புகுந்ததில் பெண் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.த

“பிற மாநிலங்களை விட, தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது”- அமைச்சர் பென்ஜமின்

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில் அமைச்சர் பென்ஜமின் கலந்துகொண்டு, திட்டதை தொடங்கிவைத்தார். தொடர்ந்து...

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் குறித்து பேஸ்புக்கில் அவதூறு… திமுகவை சேர்ந்த 2 பேர் கைது…

கோவை சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான செய்திகளை பரப்பியதாக திமுகவை சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
Do NOT follow this link or you will be banned from the site!