ஆபத்தான நோய்களை அருகே வராமல் தடுக்கும், இந்த அதிகாலை ஜூஸ்.

 

ஆபத்தான நோய்களை அருகே வராமல் தடுக்கும், இந்த அதிகாலை ஜூஸ்.

ஆபத்தான நோய்களை அருகே வராமல் தடுக்கும், இந்த அதிகாலை ஜூஸ்.

ஊட்டச்சத்து நிறைந்த ஒரு கிளாஸ் அருகம் புல் ஜூஸுடன் ஒவ்வொரு நாளையும் தொடங்கினால் அந்த நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பதோடு ,பல ஆபத்தான நோய்களை கூட அருகே வராமல் தடுக்கிறது.

அருகம் புல் என்பது பல நன்மைகள் நிறைந்த, ஊட்டச்சத்து நிறைந்த உணவு. என்ன இது வித்தியாசமாக இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம். ஒரு சிறு தொட்டியில் இந்தப் புல்லை வளர்க்கலாம். அல்லது கடைகளில் கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.

இதில் இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், அமினோ அமிலங்கள், குளோரோஃபில், வைட்டமின் ஏ, சி, ஈ போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கிறது. இதில் உள்ள  சத்துக்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, வயிற்றுக்கோளாறுகளை சரிசெய்கிறது, தீமை செய்யும் பாக்டீரியாக்களைக் கொல்கிறது. அருகம் புல்லில் அதிக குளோரோஃபில் இருப்பதால், இயல்பாகவே காரத்தன்மை கொண்டது. இதனால் செரிமான சிக்கல்கள் தீரும், மலச்சிக்கல், வயிற்றுப்புண் போன்றவை சரியாக உதவும். மேலும் இதிலிருக்கும் குளோரோஃபில்லும், செலீனியமும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவும். இவற்றைத் தவிர அனீமியா, நீரிழிவு, நோய்த்தொற்றுகள், சருமப் பிரச்சினைகள், மூட்டு வலிகள் போன்ற பிரச்சினைகளைக் குணப்படுத்தவும் அருகம் புல் உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது

இதை ஒரு நாளைக்கு 30 மி.லி. முதல் 40 மி.லி. வரை எடுத்துக் கொள்வது போதும். இதைவிட அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் கூடுதல் பலன் எதுவும் கிடைக்கப் போவதில்லை.

அருகம் புல்லின் சுவை உங்களுக்கு பிடிக்காமல் போகக்கூடும். எனவே, அதை மற்ற ஜூஸ்கள் அல்லது பானங்களில் கலந்து குடிக்கலாம்.  புதினா, சீலரி, சாத்துக்குடி ஜூஸ், கொஞ்சம் ஆலிவ் எண்ணெய், கல் உப்பு போன்றவற்றை கலந்து ஜூஸ்  செய்து அருந்தலாம் . ஜூஸாக குடிக்க முடியவில்லையெனில் மாத்திரைகள், கேப்ஸ்யூல்கள், திரவப் பொருள்களாகவும் நீங்கள் இதை உட்கொள்ள முடியும்.இவ்வளவு நன்மைகள் இதில் அடங்கியிருப்பதால்தான் விநாயகர் சதுர்த்திக்கு கூட அருகம் புல்லை வைத்து பூஜை செய்கிறோம் .