அடுத்த மாசமே பெண்களை அம்மாவாக்கும் அதிசய குணமுள்ள அதி மதுரம்

 

அடுத்த மாசமே பெண்களை  அம்மாவாக்கும் அதிசய குணமுள்ள அதி மதுரம்

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால்,  பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

Illustration Glycyrrhiza glabra0.jpg

போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.

அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.

 குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண்கள் பலரும் சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுக்க விரும்புவார்கள். அதிமதுரம் மற்றும் தேவதாரம் ஆகிய மூலிகை பொருட்களை  40 கிராம் அளவிற்கு எடுத்துக்கொண்டு, அவற்றை நன்கு பொடி செய்து, பிறகு சிறிதளவு சூடான நீரில் அப்பொடிகளை  கலந்து பிரசவ வலி ஏற்பட்ட பெண்களுக்கு, வலி உண்டானதிலிருந்து இரண்டு முறை மட்டும் கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

சிலர் காலை உணவுகளை சாப்பிடாததால் வயிறு மற்றும் குடல்களில் அல்சர் புண்கள் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். அதிமதுரப்பொடியை நீரில் போட்டு நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் அரிசி கஞ்சியுடன் அந்நீரை சேர்த்து பருகி வந்தால் வயிறு மற்றும் குடல்களில் இருக்கும் அல்சர் புண்கள் குணமாகும்.