• February
    24
    Monday

Main Area

Main



ஹார்ட் அட்டாக்கிலிருந்து தப்பிக்க இந்த ஜூஸைக் குடிங்க..

Beetroot
Beetroot

ஆரோக்யமான உடல் வேண்டுமானால் உங்கள் தினசரி உணவில் காய்கறி, பழங்கள் இரண்டையும் அதிகளவில்  சேர்த்துக்கொள்ள வேண்டும். நமது உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தினசரி உணவின்  மூலமாகவே சரிசெய்துவிட முடியும். முறையான உணவு பழக்கம் மற்றும் காய்கறி,பழங்களை தினமும் சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொண்டாலே பெரும்பாலும் நோய்கள் வராமல் தற்காத்துக்கொள்ள முடியும். 

Health

ஒவ்வொரு பழங்களுக்கும் காய்கறிக்கும் தனித்தனி சத்துக்கள் இருக்கும். அந்த வகையில் இப்போது  பீட் ரூட்டின் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.பீட் ரூட்டில் மிகவும் முக்கியமான சத்துக்களான போலேட்,ஐயன்,பொட்டாசியம்,வைட்டமின் C,B9 ஆகியவைகளை கொண்டுள்ளது,இது உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். இதுமட்டுமன்றி ரத்தத்தின் சர்க்கரை அளவுகளையும் சரிசெய்ய பீட் ரூட் சிறந்த வகையில் செயல்படுகிறது. 

beetroot for heart

மேலும்,ஆய்வுகளின்படி ஒரு டம்ளர் பீட் ரூட் ஜூசில் இருக்கும் டயட்டரி நைட்ரைட் அபரிவிதமான செயல்களை செய்யுமெனவும்,இது இதய நோய் ஏற்படுவதற்கான பாதிப்புகளை குறைக்க உதவுகிறது. எனவும் கூறப்படுகிறது,இதுமட்டுமன்றி ரத்தநாளங்களை சீர்செய்து ஹார்ட் அட்டாக் வராமல் காக்கிறது.தினசரி உணவில் பீட் ரூட் ஜூஸை சேர்த்துக்கொள்வதன் மூலம் பல நன்மைகளைப் பெற முடியும்.இதில் உள்ள குறைந்த கலோரி அளவும்,ஹை பைபர் கண்டெண்ட் ,மற்றும் ஆன்ட்டி இன்ஃபலமட்டரி ப்ராபர்டீஸ் உடலுக்கு  நல்ல ஆரோக்கியத்தை தரும்.  

 

பீட்ரூட் ஜூஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம்:

 

செய்ய தேவையான பொருட்கள்:

 

1.பீட் ரூட்  - 1 கப் 

2.இஞ்சி - 1 டீஸ் ஸ்பூன் 

3.ஆலிவ் ஆயில் - 1 டீஸ் ஸ்பூன் 

 

செய்முறை:பீட் ரூட்டை நன்கு கழுவி அதன் ஜூஸ்ஸை எடுத்து கொண்டு பின் அதில் இஞ்சியும், ஆலிவ் ஆயிலையும் சேர்த்து நன்கு கலக்கவும் சுவையும் ஆரோக்கியமும் கொண்ட பீட் ரூட் ஜூஸ் ரெடி.

beetroot juice

இந்த பீட் ரூட் ஜூஸ்ஸை தினமும் குடிப்பது உங்கள் உடலுக்கு மிகுந்த நண்மைகளைத்தரும்.குறிப்பாக உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு  எடுத்துக்கொண்டால் நீண்ட நேரம் பயிற்சி செய்வதற்கு  எனர்ஜி டானிக்காக இருக்கும்.பீட்ரூட் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது.அவர்கள் தங்களது குடும்ப டாக்டரின் ஆலோசனைக்குப் பிறகே எடுத்துக்கொள்வது நல்லது.

 

2018 TopTamilNews. All rights reserved.