டி20 உலகக் கோப்பை- பென் ஸ்டோக்ஸ் விலகல்!

 

டி20 உலகக் கோப்பை- பென் ஸ்டோக்ஸ் விலகல்!

16 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை தொடர், வரும் அக்டோபர் 17ஆம் தேதி துவங்கி, நவம்பர் 14ஆம் தேதி நிறைவடையும்.போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற உள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகிறது.

டி20 உலகக் கோப்பை- பென் ஸ்டோக்ஸ் விலகல்!
டி20 உலகக் கோப்பை- பென் ஸ்டோக்ஸ் விலகல்!

இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியை வரும் 10ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஐசிசி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் தங்கள் உலகக்கோப்பை அணியை அறிவித்துவிட்டன. மேலும், சில நாடுகள் இந்த வாரத்திற்குள் தங்கள் அணியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை நாளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணி தங்களது உலகக்கோப்பை அணியை கடைசி நாளான 10ம் தேதி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பயிற்சியாளர் சில்வர்வுட், கேப்டன் இயான் மோர்கன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த அணியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவாரா,இல்லையா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருக்கிறன்றனர். பென் ஸ்டோக்ஸ், மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இருப்பதால் தற்காலிகமாக ஓய்வு கேட்டு சென்றுள்ளார். ஆதலால் தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடர் மற்றும் அடுத்து நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில் தற்போது செய்தி வெளியிட்டுள்ள இங்கிலாந்து உள்ளூர் ஊடகம், “பென் ஸ்டோக்ஸ் தற்போது கிரிக்கெட்டில் பங்கேற்க தாயாராக இல்லை. இதனால், டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற மாட்டார்” என தெரிவித்துள்ளது. சமீபத்தில் பேட்டிகொடுத்திருந்த இங்கிலாந்து அணி பயிற்சியாளர் சில்வர்வுட், “பென் ஸ்டோக்ஸை நாங்கள் கட்டாயப்படுத்த மாட்டோம். அவர் விரும்பும்போது அணிக்கு திரும்பலாம்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இங்கிலாந்து உள்ளூர் ஊடகம், பென் ஸ்டோக்ஸ் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவித்துள்ளது. இது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை இங்கிலாந்து வெல்ல பென் ஸ்டோக்ஸ் முக்கிய பங்காற்றினார். இறுதிப்போட்டியில் தனி ஒரு ஆளாக நின்று இங்கிலாந்து அணியை வெற்றிபெற வைத்தார். தற்போது இவர் இல்லாமல் இங்கிலாந்து டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது