மீண்டும் தலைதூக்கும் கொரோனா – சீனாவில் பெய்ஜிங் மொத்த சந்தை தற்காலிகமாக மூடல்

 

மீண்டும் தலைதூக்கும் கொரோனா – சீனாவில் பெய்ஜிங் மொத்த சந்தை தற்காலிகமாக மூடல்

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்குவதால் பெய்ஜிங்கில் உள்ள மொத்த சந்தை ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டது.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 4 லட்சத்து 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 77 லட்சத்து 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 39 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். முதன்முதலில் கொரோனா வைரஸ் சீனாவில் பரவினாலும், கொரோனா பலி எண்ணிக்கை பட்டியலில் அந்நாடு தற்போது 18-வது இடத்திற்கு சென்று விட்டது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா பாதிப்பு தலைதூக்க தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து பெய்ஜிங்கில் உள்ள அதிகாரிகள் ஒரு பெரிய மொத்த விவசாய சந்தையை தற்காலிகமாக மூடிவிட்டனர். நேற்று அதிகாலை 3 மணிக்கு ஜின்ஃபாடி மொத்த சந்தை மூடப்பட்டது. இந்த சந்தையில் உள்ள இறைச்சி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளது.